பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புது நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்துள்ளார் தாமரை செல்வி. தெருக்கூத்துகளில் பங்கெடுத்து வந்த வர, பின்னர் நாடக கலைஞராகி இப்பொது விஜய் டிவி மூலம் கிடைத்த முகவரி மூலம் சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். சிறிய கிராமத்தில் இருந்து வந்து தற்போது சின்ன திரையை கலக்கி கொண்டிருக்கும் ஒரு நபர் தான் தாமரைச்செல்வி. வறுமையான குடும்பம் அக்கா, தம்பி, அண்ணன், தங்கை என பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு சிறு வயதிலேயே குடும்பத்தின் பாரத்தை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடிசை வீட்டில் மிக ஏழ்மையான சூழ்நிலையாக இருந்த போதிலும், உழைப்பால் உயர வேண்டும் என்று தெருக்கூத்து நாடகங்களில் நடன கலைஞராகவும், காமெடி கலைஞராகவும் இருந்து வந்தார் தாமரைச்செல்வி. இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்லை. நடு இரவு ஆனாலும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தன்னுடைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்வேன் என்று பலமுறை அவர் கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.
பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்று நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதிலும் தனது கணவர் பார்த்திபனுடன் இணைந்து நடனமாடி வருகிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் எனக்கு படிப்பு வரவில்லை ஆனால் நான் 10 பிள்ளைகளை படிக்கவைப்பேன் என்று கூறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Vijay Television