சரத்குமார் படத்தில் நடித்து வரும் தாமரை.! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வீடியோ.!

வெளியிட்டது

தாமரை செல்வி தற்போது மிகப்பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டு பேமஸ் ஆனவர் தாமரை செல்வி. கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் நடக்கும் மேடை நாடகங்களில் வேடமிட்டு நடனமாடி வந்தவர் தாமரைச்செல்வி. குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதால் சிறு வயதிலேயே குடும்பத்தின் பாரத்தை சுமப்பதற்காக நாடகத் தொழிலுக்கு சென்று விட்டார். இவருக்கு தம்பி தங்கைகளும் உண்டு. குடிசை வீட்டில் தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் கஷ்டத்தை தீர்ப்பதற்காக வேலைக்குச் சென்ற தாமரைச்செல்வியின் முழு நேர தொழிலாகவே நாடகம் ஆகிப்போனது.

சரத்குமார் படத்தில் நடித்து வரும் தாமரை.! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வீடியோ.! 1

நாடகத்தில் நடிக்கும் பலருக்கும் வெள்ளித்திரையில் தாம் ஒரு படமாவது நடித்து விட மாட்டோமா என்கிற ஏக்கம் உண்டு. அதே போலத்தான் தாமரைச்செல்வியும் படங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார். அந்த வேலையில் அவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலமாக தன்னை சிறிது சிறிதாக உயர்த்திக்கொண்டார். மக்களின் ஆதரவும் இவருக்கு பெரிய அளவில் இருந்தது. பிக்பாஸ்க்கு பின்னர் பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. இவரால் எதிலும் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் இவரது ரசிகர்கள் மத்தியில் இருந்த போதிலும், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார். அந்த உழைப்புக்கு பலனாக தற்போது மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார் தாமரைச்செல்வி.

சரத்குமார் நடிக்கும் ஆழி என்கிற படத்தில் தாமரைச்செல்வி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் தாமரை செல்விக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த படங்களில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த படங்களில் தாமரைச்செல்வி கமிட் ஆவதற்கும் தங்களுடைய வாழ்த்துக்களையும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆழி படத்தின் ஷூட்டிங்கிற்க்காக நாகர்கோயில் சென்றுள்ளார். அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video.!

Youtube Video Code Embed Credits: Lotus Family

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்