தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் தற்போது தமிழைப் பற்றி கோதை முழுவதுமாக புரிந்து கொண்டிருக்கிறார். மேலும் தனது மருமகன் அர்ஜுனிடம் தப்பு ஏதோ இருப்பதையும் அவர் புரிந்துகொண்டு அதை நடேசனிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்போது மிகுந்த விறுவிறுப்பான கட்டங்களில் நகர்ந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்திவரும் கோதையின் மூத்த மகன் படிக்காதவராக இருக்கிறார், இருந்த போதும் பண்பாக இருப்பதால் தனது பெற்றோர்கள் நடத்தி வந்த நிறுவனத்தை மிகச் சிறப்பாக கையாண்டு நடத்தி வருகிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் படிக்காதவர் என்பதால் சமூகத்தால் அவர் அவமானப்படுத்தப்படுகிறார். குறிப்பாக படித்த தனது தம்பி தனது கம்பெனியின் மேனேஜராக இருக்கும் நிலையில் அவரால் அவமானப்படுத்தப்படுகிறார். பின்னர் தமிழின் தங்கை ராகினியை திருமணம் செய்து கொண்டு உள்ளே வரும் அர்ஜுன் குடும்பத்தை சிதைக்கிறார். தமிழை கோதையின் கையாலேயே வீட்டை விட்டு அடித்து வெளியேற்றும் படி செய்துவிட்டார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க கோதையிடம் சவால் விடும் தமிழ், தான் முன்னேறி காட்டுவேன் என்று கூறுகிறார். அதே போல தற்போது நிறுவனங்களின் அசோசியேஷனின் தலைவராகவும் தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்டியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனை புரிந்து கொள்ளும் கோதைக்கு தன் மருமகன் அர்ஜுன்தான் ஏதோ தவறு செய்கிறார் என்கிற உண்மை தற்போது புரிந்திருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நடேசன் கோதையிடம் வந்து முக்கிய விஷயம் ஒன்றை கூறுகிறார்.
அதில் மெட்டீரியலை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது இறுதியாக இருவர் வந்து வாங்கினார்களே, அது தமிழ் சொல்லி அனுப்பிய ஆட்கள் என்று கூறுகிறார். அப்போது தமிழைப் பற்றி புரிந்து கொள்ளும் கோதை தனது மருமகன் மீது சந்தேகப்படுகிறார். தன் மருமகன் மீதுதான் ஏதோ தவறு இருக்கிறது என்கிற உண்மையை கோதை தெரிந்து கொள்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது தமிழை புரிந்து கொண்டீர்களே? அந்த அர்ஜுன் மீது தான் தவறு இருக்கிறது, அவரை முதலில் வீட்டை விட்டு வெளியே துரத்துங்கள் என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television