விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கடைசி வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அர்ஜுனனின் அம்மாவே அர்ஜூனுக்கு விஷம் வைத்து அவரை கொலை செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சீரியல் முடிவுக்கு வருவது எண்ணி ரசிகர்கள் ஒரு பக்கம் கலக்கமும் அடைந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இறுதிக்கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில், இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது குழந்தையை கொலை செய்ய துணிந்து விட்ட அர்ஜுனை அவரது தாயே உணவில் விஷம் வைத்து கொடுக்கிறார். இதனால் அர்ஜூன் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுகிறார். எனவே அர்ஜுனனின் கதை முடிவுக்கு வருவதுடன் இந்த சீரியலையும் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.
அர்ஜுன் இறந்து விடுவானா? இல்லை அவரைக் காப்பாற்றி நல்லவனாக திருந்தி வாழ்வானா? என்கிற பல கேள்விகளுடன் இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television