தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் புதிதாக தொடங்கி இருக்கும் ஃபேக்டரியின் பொருட்களை அர்ஜுன் ஆள் வைத்து சேதப்படுத்தி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் தமிழ் அடுத்து என்ன செய்ய இருக்கிறார் என்பது தெரியவில்லை. அர்ஜுனின் இந்த வில்லத்தனங்களுக்கு தமிழ் முற்றுப்புள்ளி வைப்பாரா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் தமிழின் தாய் கோதை “கோதை இண்டஸ்ட்ரீஸ்” என்கிற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சந்தையில் ஒரு நம்ரமான நிறுவனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை கோதையின் மகன்களான தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் நிர்வகித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோதையின் குடும்ப பகையை மனதில் வைத்துக்கொண்டு அர்ஜுன் என்பவர் கோதையின் மகள் ராகிணியை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்குள் நுழைகிறார். எப்படியாவது குடும்பத்தை பிரித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அதில் முதல் பகுதியாக மூத்த மகன் தமிழை குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டார். தமிழ் தன்னை கத்தியால் குத்தி விட்டதாக பொய் நாடகமாடி அவரது தாய் கோதையை நம்ப வைத்து தமிழை வீட்டில் இருந்து விரட்டி அடிக்கும் படியும் செய்து விட்டார். வெளியே வந்த தமிழ் தற்போது சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்று தனது மனைவியின் பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மற்றும் தனது தாயை அழைத்து வந்து கலந்து கொள்ள வைத்து தாயின் கையாலேயே புதிய நிறுவனத்தை திறக்கும் படியும் செய்திருந்தார் தமிழ். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் புதிய நிறுவனத்தில் வேலைகளை தொடங்குவதற்காக மெட்டீரியல் வாங்கி வைத்திருக்கிறார் தமிழ். .
அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அந்த பொருட்கள் மீது ஆசிட்டை ஊற்றி சேதப்படுத்துகிறார். இதனால் புதிதாக வாங்கி வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன. இந்த வேலையை அர்ஜுன் தான் ஆளை வைத்து செய்திருப்பார் என்று தெரிகிறது. தொடர்ந்து தமிழுக்கு தொல்லை கொடுத்து வரும் அர்ஜுனுக்கு தமிழ் முடிவு கட்டுவாரா..? என்பது விரைவில் தெரியவரும். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television