உன் லட்சியத்துக்காக என் புள்ளைய வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பீங்களா? தமிழை வெளுத்து வாங்கிய சரஸ்வதி அம்மா

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரஸ்வதி மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்வதை அவரது அம்மாவும் பாட்டியும் பார்த்து விடுகின்றனர். இது குறித்து தமிழிடம் கேள்விகளுக்கும் சரஸ்வதியின் தாயார் உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு என் பிள்ளையை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பீர்களா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு என்று பல ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். கோதை இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் கோதையின் இரு மகன்கள் தான் தமிழ் மற்றும் கார்த்திக். இவர்கள் இருவரும் இணைந்து கோதையின் நிறுவனத்தை மிகப்பெரிய அளவிற்கு மாற்றி இருந்தனர். இந்த நிலையில் கோதையில் குடும்ப பகையை மனதில் வைத்துக்கொண்டு அர்ஜுன் இந்த குடும்பத்திற்குள் நுழைகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன் லட்சியத்துக்காக என் புள்ளைய வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பீங்களா? தமிழை வெளுத்து வாங்கிய சரஸ்வதி அம்மா 1
ஒற்றுமையாக இருக்கும் இந்த குடும்பத்தை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று அர்ஜூன் சதி திட்டங்களை திட்டி வருகிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆட்களை வைத்து கத்தியால் குத்திக்கொண்டு தமிழ் தான் தன்னை குத்திவிட்டார் என்று நாடகம் ஆடுகிறார் அர்ஜூன். இதை நம்பும் தமிழின் தாய் கோதை தமிழை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விடுகிறார். வெளியே வந்த பின்னர் சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்கிற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் தமிழ். இந்த நிறுவனத்தின் மூலமாக தனது தாய்க்கு தன் மேல் எந்த தவறு இல்லை என்றும், தன்னாலும் தனியாக நின்று உழைக்க முடியும் என்றும் நிரூபித்து காட்டுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் குடும்ப பாரத்தை குறைப்பதற்காக மெக்கானிக் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் சரஸ்வதி. இந்த விஷயம் தமிழுக்கு தெரியாது. மற்ற யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் சரஸ்வதி வேலை செய்து வருவதை அவரது தாயும் பாட்டியும் பார்த்து விடுகின்றனர்.


நேராக தமிழிடம் செல்லும் சரஸ்வதியின் தாயார் மற்றும் பாட்டி அவரிடம் கோபமாக பேசுகின்றனர். உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக எங்கள் பெண்ணை வேலைக்கு அனுப்புவீர்களா? என்று கோபத்துடன் கேட்கின்றனர். இந்த விஷயம் தனக்கு தெரியாது, சரஸ்வதி வேலைக்கு எதுவும் செல்லவில்லை என்று தமிழ் பதிலளிக்கிறார். இருந்தபோதிலும் அவர்கள் கூறியதால் நேராக மெக்கானிக் ஷாப்பிற்கு செல்கிறார் தமிழ். அக்கு வேலை செய்து கொண்டிருக்கும் சரஸ்வதியை நேருக்கு நேர் பார்க்கிறார். அப்போது சரஸ்வதி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்