தமிழும் சரஸ்வதியும் தொடரில் பல அடுத்த கட்ட திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது தமிழ் மேல் எந்த தவறும் இல்லை என்கின்ற உண்மையை கோதை புரிந்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் தனது மருமகன் மீதுதான் ஏதோ தவறு இருக்கிறது என்கிற எதார்த்தத்தையும் தற்போது புரிந்து கொண்டிருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் எபிசோடில் நடேசன் கோதையிடம் வந்து கடினமாக உழைத்து நேர்மையாக நின்று அசோசியேஷன் தேர்தலில் ஜெயித்திருக்கும் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிடும் கோதை நம் கம்பெனியின் ஆட்களை அவன் கம்பெனிக்கு வாங்கியது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, நமது மாப்பிள்ளை அர்ஜுனும் மகன் கார்த்திக்கும் அவர்களை தவறாக நடத்தியதால் தான் அவர்கள் எல்லாம் நம்முடைய கம்பெனியை விட்டு சென்று விட்டார்கள் என்று நடேசன் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தொடர்ந்து கோதைக்கு அர்ஜுன் தன்னுடைய மகன் பற்றி தன்னிடம் தவறாக கூறிய விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்போது மெட்டீரியலை திருடச் சொல்லி தவறாக ஐடியா கொடுப்பது என்றெல்லாம் நமது மாப்பிள்ளை அர்ஜுன்தான் ஏதோ சதி திட்டம் திட்டுகிறான் என்று கோதையிடம் நடேசன் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கோதையும் இதெல்லாம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அர்ஜுன் யோசிப்பது எல்லாமே தவறாக இருக்கிறது. லஞ்சம் கொடுப்பது, காசு கொடுத்து ஆட்களை விலைக்கு வாங்குவது, மெட்டீரியலை திருடுவது என்று தவறான யோசனைகளை மட்டுமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு தவறான ஆள் சொல்வதைக் கேட்டு நாம் தமிழை தவறாக எண்ணி விட்டோமே என்று நடேசன் கூறுகிறார். அப்போது வருத்தப்படும் கோதை நானும் அதைத்தான் யோசித்தேன், நியாயமாக இருக்கும் தமிழ் ராகிணியின் கணவரை எப்படி கொலை செய்ய துணிந்திருப்பான் என்பது எனக்கும் புரியவில்லை.
நியாயமாக நடந்து கொள்ளும் தமிழ் சொத்துக்காகவும் பதவிக்காகவும் அர்ஜுனை கொலை செய்ய துணிந்திருப்பான் என்று எனக்கும் தோணவில்லை, எனவே நீங்கள் சொல்வதை நான் ஒத்துக் கொள்கிறேன், அர்ஜுன் மீது தான் ஏதோ தவறி இருக்கிறது என்று கோதை கூறுகிறார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுன் மீது சந்தேகப்பட ஆரம்பிக்கிறார் கோதை. அதே சமயம் தனது மகன் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television