தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ராகினி தனக்கு வயிறு வலி ஏற்பட்டது போல நாடகம் ஆடுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்போது டாப் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் கோதை தற்போது தனது மூத்த மகன் தமிழை வீட்டை விட்டு வெளியே அடித்து துரத்துகிறார். மேலும் மகன் மருமகள் என அனைவரையும் வெறுக்கிறார். தனது மருமகன் அர்ஜுன் பேச்சை நம்பிக்கொண்டு அவர் இது போல செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மகன் மீது எந்த தவறும் இல்லை தனது மருமகன் அர்ஜுன்தான் ஏதோ தவறு செய்கிறார் என்பது தற்போது கோதைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது கோதை தனது மகன் மற்றும் மருமகள் மீது எந்த தவறும் இல்லை என்று அவர்களை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதே சமயம் தனது மருமகன் அர்ஜூன் தனது பெயரையும் தனது கம்பெனி பெயரையும் கெடுக்க சதித் திட்டம் தீட்டி வருவதாக உணர்கிறார். இதனால் தனது மருமகனை கண்காணித்து வருகிறார் கோதை. இந்த நிலையில் தற்போது கோதை மற்றும் நடேசனுக்கு 60-வது திருமண நாள் நடைபெற இருக்கிறது. அந்த திருமணத்திற்கு தனது மகன் தமிழையும் மருமகள் சரஸ்வதியையும் அழைக்க வேண்டும் என்று நடேசன் கோதையிடம் கேட்கிறார். பலத்த யோசனைக்கு பிறகு கோதை அதற்கு சம்மதிக்கிறார். இந்த விஷயத்தை நடேசன் தனது மகள் ராகினி மற்றும் மருமகன் அர்ஜுனிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அப்போது கடுப்பான ராகினி அவர்கள் வந்தால் நாங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறுகிறார்.
சண்டை பெரிதான நிலையில் தற்போது ராகினிக்கு திடீரென வயிறு வலி ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் அவர் திடீரென சரிந்து விழுகிறார். பின்னர் ராகினியின் மாமியார் உங்களுக்கு இந்த இரு குழந்தைகளின் உயிர் முக்கியமா இல்லை உங்கள் மகன் முக்கியமா? என்று கேள்வி எழுப்புகிறார். அதனால் மீண்டும் கோதை தமிழை அழைக்கும் எண்ணத்தை கைவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television