தமிழுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை மேகனாவிடம் போட்டுக்கொடுத்த அர்ஜுன்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. தமிழ் மீது தொழிலதிபர் பெண் ஒருவர் காதல் கொள்வது போல் காட்டப்படுகிறது. இந்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிய வந்து அவர்களின் காதலை பிரிக்க அர்ஜுனன் சில வேலைகளில் ஈடுபடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது இயக்குனர் கதையை கொண்டு செல்லும் விதம் ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் தமிழுக்கு இன்னொரு காதல் வருவது போல காட்டப்படுவது தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை மேகனாவிடம் போட்டுக்கொடுத்த அர்ஜுன்.! 1
தொழிலதிபராக இருக்கும் தமிழ் மற்றொரு தொழிலதிபராக இருக்கும் மேகனாவை சந்திக்கிறார். அவருக்கு தொழில் ரீதியாக சில உதவிகளையும் தமிழ் செய்கிறார். இதனால் தமிழ் மீது மேகனாவிற்கு காதல் வருகிறது. ஆனால் மேகனாவுக்கு தமிழ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்கிற விஷயம் தெரியாது. எனவே தமிழ் மீது மேகனா காதல் கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த ஒரு விழாவில் மேகனா தமிழை கட்டி அணைத்துக் கொள்கிறார். இதை பார்த்து விடும் அர்ஜூன் எப்படியாவது இந்த இருவரையும் பிரித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக அவர் தற்போது கடிதம் ஒன்றை எழுதி மேகனாவின் காரில் வைக்கிறார்.


அதில் தமிழுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற விஷயத்தை கடிதத்தில் எழுதி இருக்கிறார். இந்த விஷயமும் மேகனாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்