‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் திருமணமானவர் என்கிற உண்மையை தற்போது மேகனாவிடம் போட்டு உடைத்து விடுகிறார். அர்ஜுன் இதனால் மேகனா அடுத்து என்ன முடிவு எடுப்பார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது கதைப்படி தமிழுக்கும் தொழிலதிபர் மேகனாவிற்கும் அறிமுகம் ஏற்படுகிறது. தமிழ் திருமணமாகாதவர் என்று சொல்லி மேகனாவை நம்ப வைக்கின்றனர். இதை நம்பும் மேகனாவுக்கு தமிழ் மீது காதல் வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேகனா தமிழை விரும்புவதை தெரிந்து கொண்ட அர்ஜுன், அவரிடம் எப்படியாவது இந்த விஷயத்தை கூறி விட வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக அவர் கடிதம் ஒன்றை எழுதி மேகனா காரில் வைக்கிறார். ஆனால் மேகனாவிற்கு தமிழ் படிக்க தெரியாது என்பதால் அவரால் இந்த கடிதத்தை படிக்க முடியவில்லை. எனவே நமச்சியை அழைத்து இந்த கடிதத்தை படிக்குமாறு கூறுகிறார். ஆனால் நமச்சி அதை மாற்றி படித்து விடுகிறார். இதை தெரிந்து கொண்ட அர்ஜூன், இந்த விஷயத்தை எப்படியாவது மேகனாவிடம் கூறி விட வேண்டும் என்று அவர் மேகனாவை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவரை வெளியே அடித்து துரத்துமாறு மேகனா உத்தரவிடுகிறார்.
வெளியே வந்த அர்ஜூன் தமிழுக்கு திருமணமாகவில்லை என்று சொல்லி உங்களை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கின்றனர். அவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறக்கப் போகிறது என்கிற உண்மையை கூறுகிறார். இதைக் கேட்ட மேகனா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television