தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோதையை பற்றி தவறாக பேசிய அர்ஜூனையும் அவரது அக்கா கணவரையும் உருட்டுக்கட்டையால் தமிழ் அடித்து துவைத்திருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. கோதையின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில் உள்ளே வந்த அர்ஜூன் அவரது திட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கோதையிடமிருந்து வீடு மற்றும் கம்பெனி அனைத்தையும் பறித்துக் கொண்டு கோதையின் குடும்பத்தை வீட்டில் இருந்தே விரட்டி அடித்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய குடும்பம் தற்போது தமிழ் விட்டு தஞ்சம் புகுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய வீட்டில் வாழ்ந்து வந்த கோதை குடும்பம் தமிழின் சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறது் இதை பார்த்த தமிழ் அனைவருக்கும் பெரிய வீடு பார்த்து அனுப்பி வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அனைவரும் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அர்ஜுனும் அவரது அக்கா கணவரும் வழிமறித்து கோதையை பற்றி தவறாக பேசுகின்றனர். “பத்திரத்தை படித்துப் பார்த்து கையெழுத்து போட தெரியாத மக்கு” என்று கோதையை திட்டுகின்றனர். இதனால் கடுப்பான தமிழ் இருவரையும் உருட்டுக்கட்டையால் அடித்து துவைத்து எடுக்கிறார்.
தலையில் கட்டுடன் வீட்டிற்கு வரும் அர்ஜுனைப் பார்த்து ராகிணி, என்ன ஆனது? என்று கேட்கிறார். பின்னர் அர்ஜூனை அழைத்துக்கொண்டு தமிழ் வீட்டிற்கு வரும் அவர், இன்னும் சிறிது நேரத்தில் போலீஸ் இங்கு வரப்போகிறது, அவர்கள் தமிழை கைது செய்து உள்ளே அடைக்கப் போகிறார்கள் என்று மிரட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television