தமிழும் சரஸ்வதியும் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் காண்ட்ராக்ட் எடுக்கச் செல்லும் பொழுது அவருக்கு தடங்கலாக ஒரு போன் கால் வருகிறது. இதனால் அவர் தனது நண்பர் நமச்சியை காண்ட்ராக்ட் எடுப்பதற்காக அனுப்பி வைக்கிறார். இதனால் அர்ஜூன் மிகுந்த குஷியில் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களை எட்டி இருக்கிறது. இந்த தொடரில் கோதை இண்டஸ்ட்ரீஸ் என்னும் மிகப்பெரிய லேத் பட்டறையை நடத்தி வருபவர் கோதை மற்றும் அவரது கணவர். இவரின் மகன்கள் தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை இத்தனை நாட்களாக கவனித்து வந்தனர். இந்த நிலையில் குடும்பப் பகையை மனதில் வைத்துக்கொண்டு அர்ஜுன் என்பவர் தமிழின் தங்கை ராகினியை திருமணம் செய்து கொண்டு கோதையின் வீட்டிற்குள் நுழைகிறார். அங்கிருந்து பிரச்சினைகள் தொடங்குகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் மோசமானவன் என்பதையும் அவன் தனது குடும்பத்தை கெடுக்க தான் வீட்டிற்குள் வந்துள்ளான் என்பதையும் சரஸ்வதியும் தமிழும் கண்டுபிடித்து விட்டனர். இதை கோதையிடம் எவ்வளவு சொல்ல முயற்சித்தும் அவர் இதை நம்ப மறுக்கிறார். பின்னர் ஒருமுறை அர்ஜூன் ஆட்களை வைத்து தன்னை கத்தியால் குத்தி விட்டு, தமிழ் தான் கத்தியால் குத்தினார் என்று நாடகமாடுகிறார். இதை நம்பிய கோதை தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். வீட்டில் இருந்து வெளியேறிய தமிழ் சாப்பாடுக்கே மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். அவரது நண்பர் நமச்சியின் உதவியால் தான் அவர் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் எப்படியாவது ஒரு லேத் பட்டறையை வாங்கி அதில் ஆர்டர்களை பிடித்து கோதை இண்டஸ்ட்ரிஸ்க்கு நிகராக வளர வேண்டும் என்று தமிழ் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக ஒவ்வொரு கம்பெனியாக அவர் ஏறி இறங்கி வருகிறார். ஆனால் தமிழ் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அர்ஜுன் தடுத்து விடுகிறார்.
இந்த நிலையில் இப்போது ஒரு கான்ட்ராக்ட் கிடைத்துள்ளது. காண்ட்ராக்டை எடுக்க நமச்சியும் தமிழும் வண்டியில் கிளம்பி கொண்டிருக்கின்றனர் அப்போது தமிழுக்கு போன் கால் வருகிறது. உடனடியாக நண்பர் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று போன் கால் வருகிறது. இதையடுத்து நமச்சியை மருத்துவமனைக்கு வண்டியை திருப்புமாறு தமிழ் கூற, இப்போது கான்ட்ராக்ட் தான் முக்கியம் எனவே முதலில் காண்ட்ராக்ட் எடுக்க செல்வோம் என்று நமச்சி கூறுகிறார். ஆனால் தமிழோ மருத்துவமனைக்கு சென்று விட்டு நமச்சியை காண்ட்ராக்ட் எடுப்பதற்காக அனுப்பி வைக்கிறார். இதனால் கான்ட்ராக்ட் எடுப்பதில் தமிழ் வெற்றி பெறுவாரா இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television