தமிழ் மீது இருந்த பழியை துடைத்த சரஸ்வதி.! மதுவை விரட்டி விரட்டி வெளுத்த கோதை.!

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் சீரியலில், சரஸ்வதி மருத்துவரையே அழைத்து வந்து, தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். இதனால் சந்திரகலா சிக்கலில் மாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் தன்னுடைய சொந்த மாமன் மகளான மது, தமிழ் குடித்துவிட்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை வைத்து இருந்தார். மேல் இதனால் கர்ப்பமாக இருப்பதாகவும் நாடகமாடி வந்தார். இதற்கு மூளையாக செயல்பட்டது வசுவின் தாய் சந்திரகலா தான். மதுவை ஏற்றிவிட்டு தமிழை பழிவாங்க நினைத்திருந்தார் சந்திரகலா. ஆனால் இவர்களின் திட்டங்களை முறியடிக்கும் விதமாக சரஸ்வதி 24 மணி நேரத்தில் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன் என்று கூறியிருந்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

தமிழ் மீது இருந்த பழியை துடைத்த சரஸ்வதி.! மதுவை விரட்டி விரட்டி வெளுத்த கோதை.! 1

அப்படி 24 மணி நேரத்தில் நிரூபிக்க முடியாவிட்டால் மது கழுத்தில் தமிழ் தாலி கட்ட வேண்டும் என்று மதுவின் தாயார் கூறி இருந்தார். 24 மணி நேரம் முடிந்து தாலியுடன் அனைவரும் தமிழில் வீட்டிற்கு வந்தனர். அப்பொழுது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சரஸ்வதி மதுவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரையே அழைத்து வந்து சாட்சி சொல்ல வைத்தார். அப்போது பேசிய மருத்துவர் இவர் முதலில் கர்ப்பமாகவே இல்லை, பிறகு எப்படி கரு கலையும் என்று சாட்சி கூறினார். இதனால் தமிழ் மீது இருந்த களங்கத்தை சரஸ்வதி துடைத்து விட்டார். இதை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருந்த போது, கோதை மதுவிடம் ஏன் இப்படி எங்களை பழிவாங்க நினைத்தாய் என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் உன்னை சிறு வயதிலிருந்து தூக்கி வளர்த்து உன்னை படித்து வைத்த தமிழ் மீது ஏன் இப்படி அபாண்டமாக குற்றம் கூறினாய் என்று மதுவின் கன்னத்திலேயே ஓங்கி ஓங்கி அறைகிறார். அப்பொழுது மது ஆம் நான் பொய் தான் சொன்னேன் என்று கத்துகிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது. சந்திரகலாவும் என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். மது உண்மையை கூறினால் சந்திரகலா கண்டிப்பாக மாட்டுவது உறுதி. மது சந்திரகலா தான் தன்னை இவ்வாறு செய்ய சொன்னார் என்பதை சொல்லுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்