Categories: சினிமா

“தொடர்ந்து சைதன்யாவால் குறிவைக்கப்படும் சமந்தா….நோகடிக்கும் தெலுங்கு ரசிகர்கள்”

வெளியிட்டது

அறிமுகமான நாக சைதன்யாவுடனே காதல் ஏற்பட பெற்றோர்கள் மத்தியில், மிக பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தின் மூலம், தெலுங்கு தேசத்தின் உச்ச நாயகியாக மாறிப்போனார். 4 ஆண்டுகள் திருமண வாழ்விற்கு பிறகு திடீரென இருவரும் பிரச்சனையை பற்றி கூறாமல், விவாகரத்து பெற்றனர். இது மிக பெரிய அதிர்ச்சியை சமந்தா ரசிகர்களுக்கு கொடுத்தது.

"தொடர்ந்து சைதன்யாவால் குறிவைக்கப்படும் சமந்தா....நோகடிக்கும் தெலுங்கு ரசிகர்கள்" 1

தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து படங்களில் மட்டுமே இப்போது மிக அதிகமாக கவனம் செலுத்தி வரும் சமந்தாவிற்கு எதிர்மறையாக இருக்கிறார் நாகசைதன்யா. படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர் அண்மையில் சாய் பல்லவியுடன் “லவ் ஸ்டோரி” என்ற படத்தில் நடித்து இருந்தார். இதற்கு அடுத்தப்படியாக இவர் ஹிந்தியில் நடிகர் அமீர் கானின் “லால் சிங் சாத்தா” படத்தில் நடித்துள்ளார்.

இப்பொது இவர் நடித்து வரும் படம் “Thank you”. இந்த படத்தில் இவருடன் ராஷி கண்ணா, மாளவிகா நாயர், அவிக்க கோர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷனுக்காக நாகா சைதன்யா தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் #Thankyou என கூறி தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய வளர்ப்பு நாய் ஹாஷ் என 3 புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இதில் அந்த நாயுடன் இருக்கும் போஸ்டர் தான் இப்பொது மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அது நடிகை சமந்தாவின் நாயாகும். அவரின் வளர்ப்பில் தான் இப்பொது விவாகரத்திற்கு பிறகு அந்த நாய் உள்ளது. இதனால் அம்மா, அப்பா அடுத்து தன்னுடைய காதல் மனைவி சமந்தாவிற்கு பதிலாக அவருடைய நாய் புகைப்படம் போட்டு மறைமுகமாக சமந்தாவை தான் அவர் பேசுகிறார் என பலரும் கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.

இப்பொது அந்த இன்னும் குடைச்சல் கொடுக்கும்படி நடிகர் நாகசைதன்யா நடிப்பில் ஜூலை 22 ஆம் தேதி வெளிவரவிற்கும் படத்தின் ட்ரைலர் வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், “நம்ப கூட இருந்து கஷ்ட படுத்துற காதல விட, நம்ப விட்டு பொய்யுடுற காதல் எவ்வளவோ நல்லது” என்கிற வசனம் வருகிறது. இதனை பார்த்து தான் ரசிகர்கள் இப்பொது சமந்தாவை குறி வைத்து தான் படத்தில் இவ்வாறான வசனம் உள்ளது என சமந்தாவை கலாய்த்து வருகிறார்கள். அந்த ட்ரைலர் விடியோவை நீங்களும் காண…..

Video Courtesy – DilRaju

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்