Categories: சினிமா

தல அஜித்துடன் மீண்டும் பணிபுரியும் ஆசை! கெளதம் மேனன்!!

வெளியிட்டது
தல அஜித்துடன் மீண்டும் பணிபுரியும் ஆசை! கெளதம் மேனன்!! 1

அஜித்துடன் சேர்ந்து மீண்டும் பணிபுரியும் ஆசை உள்ளது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

கெளதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம், நேற்று (நவம்பர் 29) பல்வேறு தடைகளை தாண்டி வெளி வந்தது. சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்தப் படம், பைனான்ஸ் பிரச்சினையால் தற்போதுதான் வெளியாகி உள்ளது.

எனவே, இந்தப் படத்திற்கு புரோமஷன் செய்யும் நோக்கில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் கெளதம் மேனன். அப்போது, ‘அஜித்துடன் மறுபடியும் எப்போது இணைந்து படம் பண்ணுவீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு, “அஜித்துடன் ஒரு ரீமேக் படம் பண்ணத்தான் முதலில் என்னை அழைத்தனர். ஆனால், ‘என்னிடம் ஒரு கதை இருக்கிறது’ என்று சொன்னேன். ‘கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் மாதிரி ஒரு கதை என்றால் நான் பண்றேன்’ என்று முன்வந்தார் அஜித்.

எனவே, அவருக்காக சில காட்சிகளை வடிவமைத்தேன். ‘நீ இப்படியெல்லாம் பண்ண மாட்டியே… தேவையில்லாமல் ஏன் இந்த வசனம்?’ எனக் கேட்டு அவற்றைத் திருத்தினார். அருண் விஜய்யைப் படத்துக்குள் கொண்டு வருவது முதற்கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்தவர் அவர் தான்.‘என்னை அறிந்தால்’ படத்தை மிக அழகாக நடித்துக் கொடுத்தார். அவருடன் படம் பண்ணும்போது இருந்த நட்பு என்றும் மறக்க முடியாத அனுபவம். அதன்பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

அஜித், அவருடைய உலகத்தில் இருக்கிறார். அவரைத் தொந்தரவு பண்ணக்கூடாது என நினைப்பேன். அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆசை இருக்கிறது. அப்படி இணைந்தால், அது கண்டிப்பாக ‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும்” எனப் பதில் கூறினார் கெளதம் மேனன்.‘என்னை அறிந்தால்’ படம், கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. அஜித் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா இருவரும் நடித்தனர். வில்லனாக நடித்த அருண் விஜய் ஜோடியாக பார்வதி நாயர் நடித்தார். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்