Categories: அரசியல்

மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்ததே தி.மு.க.,தான் முதல்வர்!!

வெளியிட்டது
மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்ததே தி.மு.க.,தான் முதல்வர்!! 1

உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக தேர்தல் நடத்தும் கொண்டு வந்ததே தி.மு.க.,தான், என்று முதல்வர் பழனிசாமி துாத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.

தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நேற்று மாலை துாத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி விமான நிலையத்தில் கூறுகையில், 33 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி புதிய மாவட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 2021ல் ரஜினி எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என கூறினார் என தெரியவில்லை. 2021லும் அ.தி.மு.க., ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என அவர் கூறினார் என்று நான் நினைக்கிறேன்.

2006 ஆம் ஆண்டு ஜூன் 31 ல் சட்டசபையில் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், ”அசாம்,குஜராத் போன்ற மாநிலத்தில் மறைமுக தேர்தல் நடக்கிறது. விழுப்புரம், விருதாச்சலம் 2 நகராட்சிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால் தான் மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்க வாய்ப்புகள் இல்லை ,” என்று விளக்கியுள்ளார்.

1996 வரை உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் தான் இருந்தது. நேரடி தேர்தலை கொண்டு வந்ததும் தி.மு.க., தான். அதனை தொடர்ந்து மறைமுக தேர்தலை கொண்டுவந்ததும் தி.மு.க., தான். மறைமுக தேர்தல் என்று ஸ்டாலின் சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் தவறா?.ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் நடத்தபடும் மறைமுக தேர்தலை போல மாநகராட்சி, நகராட்சிகளும் தேர்தல் நடத்தப்படும்.

மறைமுக தேர்தலுக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காலகட்டத்திற்கு ஏற்றார் போல முடிவு எடுக்கவேண்டியுள்ளது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுக தேர்தல் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் சட்டரீதியாக நடக்கிறது.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்