தனது அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது விரைவில் அடுத்த படத்தின் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறேன் என்று லெஜன்ட் அண்ணாச்சி பேட்டி அளித்திருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜென்ட் அண்ணாச்சி ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்த காரணத்தினால் தனது விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி என்ற இருவரை வைத்து தனது முதல் படமான தி லெஜெண்ட் படத்தை எடுத்திருந்தார். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வராத காரணத்தினால் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தானே உருவாக்கி அந்த நிறுவனத்தின் சார்பாக முதல் படத்தை தயாரித்து இருந்தார் சரவணன். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர், நாசர், யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் சரவணன் நடித்த போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார் சரவணன். பின்னர் படங்களில் நடித்த போது இந்த விமர்சனம் இன்னும் அதிகமானது. ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார் லெஜென்ட் சரவணன். தற்போது கோயம்புத்தூரில் கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த சரவணன் பத்திரிக்கையாளர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
தனது அடுத்த படத்திற்கான கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிக்க இருக்கிறேன். இயக்குனர் யார் என்பதெல்லாம் சில காலம் பொறுத்து இருங்கள் விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறினார். மேலும் படத்தில் நடிக்கும் பலருக்கும் அரசியல் ஆசை வந்து விடுகிறது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்ட கேள்விக்கு மக்கள் முடிவெடுத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். தற்போது நடக்கும் திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்து பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். அண்ணாச்சியின் இந்த அறிவிப்பால் அவரது இரண்டாவது படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. நீங்களும் லெஜெண்ட் சரவணனின் முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Polimer News