Categories: சினிமா

மரண குத்து போடும் அண்ணாச்சி.. போ போ முதல் வீடியோ சாங் வெளியானது

வெளியிட்டது

தற்போது லெஜெண்ட்படத்தின் ஒரு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்பொது சமூகவலைத்தளத்தை திறந்தாலே காணப்படும் விஷயம் நம்ப லெஜெண்ட் அண்ணாச்சி தான்.கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் என்பவர் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து தள்ளினாலும் அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து பெஸ்ட்டு பெஸ்ட்டு என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தி லெஜண்ட் என்று ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்.

மரண குத்து போடும் அண்ணாச்சி.. போ போ முதல் வீடியோ சாங் வெளியானது 1

இந்த திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது. அதன் பிறகு பாலிவுட் நடிகையை மற்றும் உலக அழகியுமான ஐஸ்வர்யாராயை சரவணன் அந்த படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்துள்ளார். அதற்காக பல கோடிகள் சம்பளம் கொடுக்கப் போவதாக கூறியும் அவர் நேரில் கூட பார்ப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

டத்தின் டிரைலர் சுமார் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. மேலும், நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெறும் 24 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வலிமை திரைப்படம் வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. “தி லெஜெண்ட்”படம் தற்போது ரிலீஸ்ஸிற்கு தயாராகி வருகிறது. படத்தை 400 முதல் 500 திரையரங்குகளில் வெளியிட அண்ணாச்சி திட்டம் தீட்டியுள்ளார். படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வெளியிடுகிறார். படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என சில தினங்கள் முன்பு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழக உரிமையை ஏற்கனவே கோபுரம் பிலிம்ஸ் ஜி.அன்புச்செழியன் வாங்கியுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியானது. தற்போது படத்தின் ஒரு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பாடலை நீங்களும் காண Watch the below video..

Youtube video code embed credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்