Categories: சினிமா

காஷ்மீரில் இருந்து மரண மாஸ் அறிவிப்பை வெளியிட்ட Legend சரவணன்.! லியோ படத்தில் நடிக்கிறாரா??

வெளியிட்டது

லெஜெண்ட் சரவணன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். புதிய போஸ்டர்களுடன் அந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர் முக்கியமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அதன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். சென்னையில் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளராக இருப்பவர் சரவணன். இவர் ஆரம்பத்தில் தனது துணிக்கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளாக இருந்த ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் நடனமாடி வந்தார். அப்போது அவர் பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டார். இருந்தபோதிலும் மனம் தளராமல் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வந்த அவருக்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்தது. தனது விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி என்ற இருவரை வைத்து “தி லெஜண்ட்” என்று தனது கடை பெயரிலேயே படத்தை எடுத்திருந்தார் சரவணன்.

காஷ்மீரில் இருந்து மரண மாஸ் அறிவிப்பை வெளியிட்ட Legend சரவணன்.! லியோ படத்தில் நடிக்கிறாரா?? 1
இந்தப் படத்திற்காக மிகவும் பொருட்செலவு செய்து இருந்தார். மறைந்த சின்ன கலைவாணர் விவேக் ஆகியோர் கூட இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரவணனுக்கு ஜோடியாக வட இந்தியாவில் பிரபல மாடலாக இருக்கும் ஊர்வசி ரௌத்தாலா நடித்திருந்தார். இந்த படம் மருத்துவத்துறையில் நடக்கும் மாஃபியாவை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் படம் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் குடும்பம் குடும்பமாக சென்று இந்த படத்தை பலரும் பார்த்து ரசித்து வந்தனர். தொடர்ந்து பேட்டியளித்து வந்த சரவணன் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு சென்று இருந்த லெஜென்ட் சரவணன் அங்கிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். மேலும் விரைவில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் லெஜன்ட் சரவணன்.


அனைவரும் லியோ படத்தில் லெஜென்ட் சரவணன் நடிக்க இருப்பதாக யூகித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தான் நடித்த லெஜன்ட் படத்தை ஓடிடி தளமான hotstar-ரில் நாளை ரிலீஸ் செய்ய இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். சரவணன் பலரும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு தற்போது ஹாட்ஸ்டாரில் தனது படத்தை ரீலீஸ் இருக்கிறார். யாரும் இந்த படத்தை வாங்க முன்வராத காரணத்தினால் காத்திருந்து காத்திருந்து இறுதியில் ஹாட்ஸ்டார் இடம் இந்த படத்தை விற்பனை செய்திருக்கிறார் சரவணன். இதேபோல இவர் படத்தை யாரும் தயாரிக்க முன் வராததால் தானே சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தை உருவாக்கி படத்தை தயாரித்து இருந்தார். அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்டார் இடம் தனது படத்தை விற்பனை செய்து இருக்கிறார் சரவணன் அந்த தகவலை தனது twitter பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்