கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போய் இருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அண்ணாச்சி. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருப்பவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன்.

இவர் ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார். குறிப்பாக தமன்னா, ஹன்சிகா போன்றவர்களுடன் அவர் தோன்றி நடித்தது பெரும் கேலிக்கு உள்ளானது. பலராலும் மிகவும் மோசமாக உருவக் கேலி செய்யப்பட்டார் லெஜெண்ட் சரவணன். இருந்தபோதிலும் தொடர்ந்து மனம் தளராமல் விளம்பரங்களில் நடித்து வந்த அவருக்கு படத்தில் நடிக்கும் ஆசையும் வந்தது. அதனால் அவர் தி லெஜன்ட் என்கிற படத்தை அவரே தயாரித்து நடித்திருந்தார்.
இந்தப் படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியிருந்தபோதிலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பலரும் குடும்பம் குடும்பமாக அந்த படத்தை சென்று பார்த்து வந்தனர். அடுத்தபடியாக லெஜன்ட் சரவணன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.
பேட்டிகளின் போது விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று லெஜென்ட் சரவணன் பேசி வரும் நிலையில் சமீபத்தில் அவர் காஷ்மீருக்கு சென்று இருக்கிறார். அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஒருவேளை லெஜன்ட் சரவணனும் லியோ படத்தில் நடிக்க இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ லெஜன்ட் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜன் யூனிவர்சில் லெஜன்ட் இணைய இருக்கிறார் என்றும் தங்களது யூகங்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால் இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார் லெஜெண்ட். இதனால் அவர் லியோ படத்தில் நடிக்கப்போவதில்லை என்பது உறுதியாகி இருந்தது. தற்போது அடுத்த படங்களுக்காக தயார் ஆகி வருகிறார் லெஜெண்ட். இதற்காக அவர் தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.