சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு!!

வெளியிட்டது
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியீடு!! 1
Sivakarthikeyan’s Hero Second Look Poster

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் ஹீரோ. இது இவரது 15 ஆவது படம். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும், அர்ஜுன், இவானா ஆகியோர் பலரும் நடிக்கின்றார்கள். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் காட்பாடி ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் 2 ஆவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இதில், சிவகார்த்திகேயன் பின்புறம் திரும்பி நின்று கொண்டு முகமூடி அணிந்திருந்த நிலையில் அந்த போஸ்டர் அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இதற்கு முன்னதாக ஜீவா நடிப்பில் வந்த முகமூடி படத்தில் தழுவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்திற்கு சரியான திரைக்கதையும் அமையவில்லை. ஆதலால், படுதோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இரும்புத்திரை படத்தின் இயக்குநர் என்பதால், ஹீரோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சிவகார்த்திகேயனும், அவரது ரசிகர்களும் இப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ.5. 31 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்