காலை வைத்து சைடு லாக்கை உடைத்து, புல்லட்டை அசால்ட்டாக திருடிய திருடன் | Viral Video

வெளியிட்டது

நம் ஊரில் நடக்கும் திருட்டுகள் பலவிதம். நூதன முறையில் திருடி பிழைக்கும் பல கும்பல்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த இணைய உலகில் திருட்டு கும்பல்களின் ஆதிக்கம் அளப்பரியது. அரை குறை தமிழில் வடநாட்டு நபர்கள் “கார்டு மேல இருக்கே 16 நம்பர் சொல்லுங்கோ” என்று மொபைல் வழியாக திருடுபவர்களும், முகநூல் மெசஞ்சரில் வந்து உங்களிடம் ஒரு 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தால் கொடுங்கள் இரவுக்குள் திருப்பி தந்து விடுகிறேன் ஃபேக் ஐடி மூலம் திருடும் ஆட்களும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றனர். இதெல்லாம் இப்படி என்றால் தற்போது நடந்துள்ள சம்பவம் வேறு மாதிரி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

காலை வைத்து சைடு லாக்கை உடைத்து, புல்லட்டை அசால்ட்டாக திருடிய திருடன் | Viral Video 1

அப்படி பல திருட்டுகள் டிஜிட்டல் உலகில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பைக் திருடும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் வட இந்தியாவில் நடந்துள்ளது. 15 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பைக் திருடுவதில் வல்லவராக இருந்து வந்துள்ளார். ஒரு நாள் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிய அந்த இளைஞரிடம் பைக் திருடுவது எப்படி என்று டெமோ செய்து காட்ட சொல்லியுள்ளனர் போலீசார். கள்ளச்சாவி ஏதும் இன்றி அந்த இளைஞர் பைக்கை திருடும் முறையை செய்து காட்ட ஆச்சரியத்தில் உறைந்தனர் போலீசார்.

சீட்டின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு காலை வைத்து சைடு லாக்கை உடைக்கிறான் அந்த திருடன். பிறகு ஒரு ஒயரை வாயில் கடித்து இழுத்து விட்டு செஃப்பை அழுத்த பைக் ஆன் ஆகி விடுகிறது. இந்த முறையை பயன்படுத்தி ராயல் என்ஃபீல்டு புல்லட்டுகளை அவன் தொடர்ந்து திருடி வந்நது தெரியவந்தது. விலை உயர்ந்த, அந்த வண்டியில் போனாலே கெத்து என்று காசை கொட்டி வாங்கினால் இவன் போல் திருடர்கள் அசால்ட்டாக திருடுவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Video Below..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்