தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சுடருக்கு பார்டிகாடாக வெற்றியை போலீசார் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இந்த செய்தியை அறிந்த அபி தற்போது ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் பிரபல ரவுடியாக இருக்கும் வெற்றி எதிர்பாராத விதமாக அபியின் கழுத்தில் கோவிலில் வைத்து தாலி கட்டி விடுகிறார். பின்னர் அபியும் வெற்றியும் இணைந்து ஒன்றாக வாழ தொடங்குகின்றனர். இங்கிருந்து இந்த கதை தொடங்குகிறது. முடியும் தருவாயில் இருந்த இந்த கதை திடீரென யூ டர்ன் போட்டு தற்போது கதைக்களத்தை வேறு விதமாக மாற்றி இருக்கின்றனர். அதில் வெற்றி மிகப்பெரிய ரவுடியாக மாறி இருப்பதாகவும், அபி கலெக்டராக மாறியிருப்பதாகவும் இவர்களுக்கு பிறந்த குழந்தை சுடர் அபியிடம் வளர்வது போலவும் காண்பிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் தெருவில் வெற்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது ரவுடி ஒருவர் வெற்றியை கத்தியால் குத்த வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்த சுடர் வெற்றியை எச்சரித்து காப்பாற்றினார். அன்று தொடங்கி வெற்றியும் சுடரும் ஒருவர் ஒருவர் அறிமுகம் இல்லாமலே பழகத் தொடங்குகின்றனர். வெற்றிக்கும் சுடர்தான் தன் மகள் என்று தெரியாது சுடருக்கும் வெற்றிதான் தன் தந்தை என்று தெரியாது. ஆனால் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகியது. சுடர் இல்லாமல் வெற்றியால் இருக்க முடியாது என்கிற நிலைமை உருவாகி இருக்கிறது. மேலும் வெற்றி குடித்து கும்மாளம் போடுவதை பார்த்து சுடர் இனிமேல் குடிக்க கூடாது என்று சொல்லி அவரிடம் பேசாமல் இருந்தார். வெற்றியும் அது போல இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்று சொல்லி மனம் திருந்தி இருக்கிறார். இந்த நிலையில் சுடருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அபியின் எதிரிகள் இந்த விபத்தை திட்டமிட்டு நடத்துகின்றனர்.
இதனால் சுடரை பார்த்துக் கொள்வதற்காக பாடிகார்டு ஒருவரை நியமிப்பதற்காக வெற்றியை அணுகுகின்றனர். வெற்றியும் அபியும் இல்லத்திற்கு வருகிறார். அவரைப் பார்த்த அபி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். இந்த கதை போகும் போக்கை பார்த்தால் இது விஸ்வாசம் கதையை அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் தற்போது கமெண்ட்களில் கலாய்த்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television