உனக்கு மரியாதை அவ்ளோதான்.! வீட்டை விட்டு வெளியே போடா.! வெற்றியை துரத்தி விட்ட அபி.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அபி வெற்றியை வீட்டில் இருந்து விரட்டி அடித்து விடுகிறார். இதனால் சுடர் வெளியே போகாதே சிம்பா என்று சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அந்த நெகழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த தொடரில் கதாநாயகனாக வெற்றி கதாபாத்திரத்தில் வினோத் பாபுவும், கதாநாயகியாக அபி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா ஜனனியும் நடித்து வருகின்றனர். தற்போது கதைப்படி வெற்றி மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அவரது மனைவி அபி கலெக்டராக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் சுடர் என்கிற குழந்தை பிறக்கிறது. சுடர் தற்போது வளர்ந்து பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்திருக்கிறது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுடரும் வெற்றியும் நண்பர்களாக ஆகிப் போகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கு மரியாதை அவ்ளோதான்.! வீட்டை விட்டு வெளியே போடா.! வெற்றியை துரத்தி விட்ட அபி.! 1
சுடருக்கு தன்னுடைய தந்தை தான் வெற்றி என்பது தெரியாது. அதேபோல் வெற்றிக்கும் சுடர் தான் பெற்ற மகள் என்பது தெரியாது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் சுடருக்கு கலெக்டராக இருக்கும் அபியின் எதிரிகளால் ஆபத்து ஏற்படுகிறது. சுடர் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளாகிறது. இதனால் அவருக்கு பாடிகார்டாக வெற்றியை நியமனம் செய்ய போலீசார் விழைகின்றனர். அதேபோல் வெற்றியும் சுடருக்கு பாதுகாவலராக சுடர் வீட்டிலேயே தங்கி இருக்கிறார் .வெற்றி ஒரு ரவுடி என்பது மட்டும்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் கொலை செய்திருக்கிறார் என்று சொல்லி பத்திரிகைகளில் செய்தி வருகிறது. மேலும் ஒரு கொலையாளியை கலெக்டர் அபி தனது வீட்டில் வைத்து பாடி கார்டாக வைத்து வருகிறார் என்ற செய்தி ஊர் முழுக்க பரவத் தொடங்குகிறது. இந்த செய்தியை அபியும் படிக்கிறார். இதனால் கோபமான அபி வெற்றியிடம் கத்துகிறார். வெற்றியின் நண்பராக இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் வெற்றியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்.


நீ ரவுடி என்று தான் நினைத்தேன். ஆனால் நீ இப்படி கொலையாளியாக இருப்பாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை இப்போதே வீட்டை விட்டு வெளியே செல் என்று கோபத்தில் கத்துகிறார். இதைக் கேட்ட சுடர் பாப்பா நீ கொலையெல்லாம் செய்திருக்கிறாயா சிம்பா என்று சொல்லி அழுகிறார். மேலும் வீட்டை விட்டு வெளியே போகாதே என்று சொல்லி கதறி அழுது கொண்டிருக்கிறார். ஆனாலும் வெற்றி தற்போது அபியிடம் இருந்து பிரிந்து வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்