தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஊரிலிருந்து கிளம்பும் அபி இனிமேல் என்னை தொந்தரவு செய்யக்கூடாது இனிமேல் என் முகத்திலேயே முழிக்கக்கூடாது அதுதான் நீ எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவி என்று சொல்லிவிட்டு செல்கிறார். அந்த ப்ரோமோவால் மீண்டும் அபிக்கும் வெற்றிக்கும் சண்டை எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் அபியும் வெற்றியும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்துள்ளது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக தன்னுடன் ஊருக்கு வந்த அபிக்கு தற்போது வெற்றி நன்றி சொல்கிறார். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் முதலில் அபியும் வெற்றியும் விழாவின் கடைசி நிகழ்வான மஞ்சள் நீராட்டு விழாவில் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
பின்னர் அபி ஊருக்கு செல்வதற்காக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் வெற்றி தன்னுடைய தந்தையின் ஆசைக்காக இங்கு வந்ததற்கு நன்றி என்று கூறுகிறார். அப்போது கோபமான அபி, உன் நன்றியை நீயே வைத்துக்கொள் இனிமேல் என்னை தேடி வராதே, அதுதான் நீ எனக்கு செய்யும் உதவி என்று கூறுகிறார். உடனே வெற்றி நீ என்னை எவ்வளவு துரத்தினாலும் உன் காலை சுற்றும் நாயாக வருவேன் என்று சொல்கிறார். அத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television