சுடர் தான் பெற்ற மகள்தான் என்பதை தெரிந்து கொள்ளும் வெற்றி தற்போது கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார். மனதை கலங்க வைக்கும் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் வெற்றியின் நடிப்பை பார்த்து கண் கலங்கி விட்டதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் நடிகர் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்திலும், நடிகை பவித்ரா ஜனனி அபி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் வெற்றி மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். கோவிலில் ஏற்பட்ட ஒரு சண்டையில் அபியின் கழுத்தில் வெற்றி தாலி கட்டி விடுகிறார். விளையாட்டுக்கு செய்த இந்த காரியம் பின்னாலில் விபரீதம் ஆகிறது. வெற்றியுடன் தான் வாழ்வேன் என்று சொல்லி அபி வெற்றியும் வீட்டிற்கு கிளம்பி வருகிறார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அபியை புரிந்து கொள்ளும் வெற்றி, அவருடன் சேர்ந்து வாழ தொடங்குகின்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த கதை முடியும் தருவாயில் இருந்தது. அதன் பின்னர் கதையை வேறு களத்திற்கு மாற்றி அமைத்திருக்கின்றனர். அபி ராஜஸ்தான் சென்று படித்துவிட்டு கலெக்டராகி இருப்பது போலவும், வெற்றி மிகப்பெரிய ரவுடியாக இருப்பது போலவும் கதை வேறு களத்திற்கு மாறி இருந்தது. இந்த நிலையில் வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை சுடருடன் வெற்றிக்கு அறிமுகம் ஏற்படுகிறது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல சுடர் அபிக்கு பிறந்த குழந்தை என்பதை வெற்றி தெரிந்து கொள்கிறார். ஆனால் இது அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தை இல்லை, அபிக்கும் வேறு ஒருவருக்கும் பிறந்த குழந்தை என்று நடுவில் சிலர் வெற்றியின் மனதை மாற்றுகின்றனர். இதனால் குழப்பம் அடையும் வெற்றி சுடர் தனக்கு பிறந்த மகள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லி அபி ராஜஸ்தானில் கலெக்டருக்கு படித்துக் கொண்டிருந்த கிராமத்திற்கு தேடி அலைகிறார். தற்போது விஏஓவை சந்திக்கும் அவர், சுடரின் பிறப்பு குறித்த உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுடர் வெற்றிக்கு பிறந்த குழந்தை என்பதை வெற்றி தெரிந்து கொள்கிறார். அப்போது அவர் மனம் உடைந்து கதறி அழுகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television