அபி வீடு வாசலில் கிடந்த மர்ம Gift Box.! திறந்து பார்த்து பயத்தில் அலறிய சுடர் மற்றும் அபி.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடரும் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது அபி வீட்டிற்கு ஒரு பார்சல் ஒன்று வந்திருக்கிறது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ஒருவரின் விரலை வெட்டி வைத்து அனுப்பி இருக்கின்றனர். அந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இது ராட்சசன் படத்தில் வந்த சீன் அல்லவா என்று இந்த தொடரை தற்போது கலாய்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக அபி என்கிற கதாபாத்திரத்தில் பவித்ரா ஜனனியும், ஹீரோவாக நடிகர் வினோத் பாபு வெற்றி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் கதைப்படி தற்போது வெற்றிக்கும் அபிக்கும் சுடர் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபி வீடு வாசலில் கிடந்த மர்ம Gift Box.! திறந்து பார்த்து பயத்தில் அலறிய சுடர் மற்றும் அபி.! 1

ஆனால் வெற்றிக்கு இத்தனை நாள் சுடர் தன் பிள்ளை என்பது தெரியாது. ஆனால் இதை எப்படியோ கண்டுபிடித்து தற்போது சுடர் தன்மகள் என்பதை நிரூபித்திருக்கிறார் வெற்றி. இந்த நிலையில் தற்போது வெற்றிக்கும் அபிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. அபி வெற்றியை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அபிக்கு தொடர்ந்து அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்படுகிறது. அபியை பழிவாங்கும் நோக்கில் அவரது வீட்டிற்கு மர்ம பார்சல் ஒன்று வருகிறது. அந்த பார்சலை பிரித்து பார்க்கும் அபியின் மகள் சுடர் பயத்தில் அதை தூக்கி எறிகிறார். அப்போது அந்த பார்சலுக்குள் வெட்டப்பட்ட ஒரு விரல் ஒன்று இருக்கிறது. இதனை கண்ட சுடர் பயந்து அலறி துடிக்கிறார். அபியும் பயத்தில் அலறுகிறார்.


மேலும் அபிக்கு எதிராக தற்போது பெண்களும் போராட்டத்தில் இறங்குகின்றனர். மேலும் அபியின் மீது அழுகிய முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீசி அசிங்கப்படுத்துகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இது ராட்சசன் படமாச்சே என்று கலாய்த்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்