அபி உன்ன பெத்த அம்மா இல்லையா?? வெற்றி கேட்ட கேள்வி.! அதிர்ச்சி பதில் சொன்ன சுடர்.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெற்றி சுடரிம் அபி உன் அம்மாவா? இல்லை விஜி உன் அம்மாவா என கேட்க என் அம்மா யார் என்று உனக்கு சொல்ல மாட்டேன் என பதில் அளிக்கிறார். மேலும் விஜியிடம் கண்மணி வெற்றிதான் என் புருஷன், அதை தடுக்க எவராலும் முடியாது என பதில் அளிக்கிறார். அந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக ஓடிக் கொண்டிருப்பது தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த தொடரின் கதாநாயகனாக வெற்றி என்ற கதபாத்திரத்தில் வினோத் பாபுவும், பவித்ரா அபி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது கதைப்படி வெற்றி பெரிய ரவுடியாகவும், அபி கலெக்டராக இருப்பது போலவும் கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபி உன்ன பெத்த அம்மா இல்லையா?? வெற்றி கேட்ட கேள்வி.! அதிர்ச்சி பதில் சொன்ன சுடர்.! 1

அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தை சுடருக்கும் வெற்றிக்கும் தங்களைப் பற்றிய அறிமுகமே இல்லாமல், நட்பு ஏற்படுகிறது. பின்னர் வெற்றியும் அபியும் சந்தித்துக் கொள்கின்றனர். தற்போது கதைப்படி அபியை எதிரிகள் கடலில் கல்லை கட்டி போட்டு விடுகின்றனர். அபியை காப்பாற்ற வரும் வெற்றியும் அபியுடன் நடுக்கடலில் மாட்டிக் கொள்கின்றனர். மேலும் ஒரு தனித் தீவுக்கு வரும் அவர்கள் அங்கு மாட்டிக் கொண்டு பின்னர் அங்கிருத்தும் தப்பி வீடு திரும்பி விடுகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெற்றியை பார்ப்பதற்காக சுடரை அழைத்துக் கொண்டு வருகிறார். வெற்றி சுடரிம் விஜியை அம்மா என்று அழைக்கிறாயே உனக்கு அபி அம்மாவா? இல்லை விஜி அம்மாவா என்று கேட்க, என் அம்மா யார் என்று உனக்கு சொல்ல மாட்டேன் என பதில் அளிக்கிறார் சுடர்.

இந்த நிலையில் விஜியை தனியாக அழைத்து செல்லும் கண்மணி வெற்றி தான் என்னுடைய புருஷன் அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது என சவால் விடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்