
பான் இந்திய படங்களின் மூலம் தமிழ் திரைக்கு வரும் அடுத்த தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி. தமிழ் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் இந்த படத்தில் ராமுடன் இணைந்து நடிகை கிருதி ஷெட்டி, ஆதி போன்றோர் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் பொத்தினேனிக்கு பரிசாக இந்த டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.போலீஸ் அதிகாரியாக தோன்றும் ராம் கனகச்சிதமாக அந்த பாத்திரத்துக்கு பொருந்துகிறார். அரசியல் வில்லனாக வரும் ஆதி மிரட்டுகிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு பாடிய புல்லட் சாங் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ராம் நல்ல வெற்றியை குறிவைத்துள்ளார். படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக அந்த பாடலில் வரும் கிருத்தி ஷெட்டியின் நடனம் பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த பாடல்களும், ட்ரைலரும் படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற ட்ரைலர் எவண்ட்டில் கூட இயக்குனர் லிங்குசாமி திடீரென மேடையில் அழுத்த சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.தன்னுடைய கடைசி இரண்டு படங்கள் “அஞ்சான்” மற்றும் “சண்டக்கோழி 2” படத்தில் விட்ட வெற்றியை இந்த படத்தில் எப்படியேனும் பெற்று விட வேணும் என இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தில் கடினமாக உழைத்து வருகிறார். இவர் தமிழில் ஆனந்தம், சண்டக்கோழி, ரன், பையா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லிங்குசாமியின் முந்தைய திரைப்படங்களில் ஏற்பட்ட கடன் காரணமாக இந்த சிக்கல் நீடித்து வருகிறது. லிங்குசாமி தற்போதைய நிலையில் 5 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே படத்திற்கான என்.ஓ.சி கிடைக்கும் என திரைத்துறையில் கூறுகின்றனர்.
சென்னையில் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் லிங்குசாமி, பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது வரையில் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே ஒரே ஒரு திரையரங்கில் படத்திக்கான புக்கிங் ஓபன் ஆகியுள்ளது. பிரச்னை முடிந்து சுமுகமான தீர்வு எட்டும் வரையில் இது நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.