என் தம்பி விக்ரமனுக்கு ஓட்டு போடுங்க.! கடைசி நிமிடத்தில் விக்ரமனுக்கு வாக்கு சேகரித்த திருமாவளவன்..!

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐந்து சீசன்களை முடிந்து தற்போது ஆறாவது சீசனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது விஜய் டிவி. இந்த சீசனையும் வழக்கம்போல் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். எப்பொழுதும் சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தற்போது முதல் முறையாக அரசியல்வாதி ஒருவரை களம் இறக்கி இருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த விக்ரமனை ஒரு போட்டியாளராக களம் இறக்கியது பிக்பாஸ். 100 நாட்களை கடந்து இறுதி 5 போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வருகிறார் விக்ரமன்.

என் தம்பி விக்ரமனுக்கு ஓட்டு போடுங்க.! கடைசி நிமிடத்தில் விக்ரமனுக்கு வாக்கு சேகரித்த திருமாவளவன்..! 1

விக்ரமன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் சில நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் திரைத்துறையை விட்டு விலகி அரசியல் துறைக்குள் தன் கவனத்தை செலுத்தினார் .விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். தமிழகம் மட்டுமல்லாமல் வட இந்திய சேனல்கள் நடத்தும் விவாத மேடைகளில் கலந்து கொண்டு தமிழகம் சார்பாகவும், அவரது கட்சி சார்பாகவும் பேசி வருகிறார். இந்த நிலையில் விக்ரமனுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. அவர் அசீமிடம் எந்த இடத்திலும் நிதானத்தை இழக்காமலும் வார்த்தையை விடாமலும் எத்தனை பெரிய சண்டை வந்தாலும் பொறுமையை கையாளுகிறார் மேலும் அதேபோல் மற்ற போட்டியாளர்களையும் மரியாதையுடன் நடத்தி வருகிறார். இதனால் விக்ரமன் ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும் போதும் முதலில் சேவ் ஆகி விடுகிறார்.

சமீபத்தில் விக்ரமன் பற்றி தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி வைரலானது. எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் தனது அரசியல் அடையாளத்தையும் எங்கேயும் மறைக்கவில்லை. தான் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர், பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை கொண்டவர் என்பதை அவர் எல்லா இடத்திலும் தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறார். இவ்வாறு அவர் பேசுவதே தமக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று திருமாவளவன் பேசி இருந்தார். இந்த நிலையில் விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு திருமாவளவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பதிவு வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் DisneyPlus ஹாட்ஸ்டார் app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். ஹேஷ்டேக் #அறம்வெல்லும் என்று பதிவிட்டு இருக்கிறார். Twitter Original Source From: Thol. Thirumavalavan

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்