சொற்ப வாக்குகள் வாங்கி கடைசி இடத்தை பிடித்த போட்டியாளர்.! இந்த வாரம் வெளியேற போறது இவர் தானா?

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டிலிருந்து 11ஆவது நபராக வெளியேறப் போகும் நபர் குறித்த தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளை வீக் எண்டு எபிசோடு என்பதால் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி சுமார் 68 நாட்களை கடந்து விட்டது. மீதம் 32 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்றுவரை 11 நபர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 5 வாரங்கள் மீதமுள்ள நிலையில் அடுத்தடுத்து ஐந்து போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு மீதம் இருக்கும் ஐந்து நபர்களை டாப் 5-ல் வைக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது பன்னிரண்டாவது நபராக ஒருவரை வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. நமது இணையதளத்தில் எடுத்த அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் அவரே பின்தங்கி இருக்கிறார். எனவே அவர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

சொற்ப வாக்குகள் வாங்கி கடைசி இடத்தை பிடித்த போட்டியாளர்.! இந்த வாரம் வெளியேற போறது இவர் தானா? 1
அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது வரை மொத்தம் பத்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஜி.பி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் என்று மொத்தம் பத்து போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ரட்சிதா, ஏடிகே மணிகண்டன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து வந்தனர். இதில் அசீம் மற்றும் விக்ரமன் முதல் இரண்டு இடங்களை பிடிக்க மணிகண்டன் கடைசி இடத்தை பிடித்திருக்கிறார். எனவே இவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி விஜய் டிவி முடிவுகளை மாற்ற எண்ணினால் ஏடிகே வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.


மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் சொந்த அண்ணன் ஆவார். இவர் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு எடுத்திருக்கிறார். முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பான அவள் என்கிற நாடகத்தில் அவர் நடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகு என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வேலுநாச்சி என்கிற சீரியலிலும் அவள் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரையில் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கெடுத்திருக்கிறார். இந்த நிலையில் பிக்பாஸில் 68 நாட்களைக் கடந்த அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்