இந்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமியை வெளியேற்றும் பிக்பாஸ்.?? வலுக்கும் கண்டனங்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேற இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 74 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் தனலட்சுமி வெளியேற இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஜனனி வெளியேறிய போது மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்களோ அதே போல தற்போது தனலட்சுமி வெளியேற்றத்திற்கும் மக்கள் இணையதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேர்மையற்ற முறையில் இந்த எலிமினேஷன் நடைபெற்று இருப்பதாக அவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமியை வெளியேற்றும் பிக்பாஸ்.?? வலுக்கும் கண்டனங்கள்.! 1

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 21 வயது ஆகும் இவர் சீசன் 1 தொடங்கி பிக்பாஸை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். பின்னர் தனக்கும் பிக்பாஸில் ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஏங்கிய அவர், டிக் டாக்கில் வீடியோக்களை செய்து வந்தார். டிக் டாக் செயலி முடங்கிய பின்னர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தனலட்சுமி. இவர் மீது வெளியில் பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. பிக்பாஸில் கதை சொல்லும் நிகழ்ச்சியில் தன்னிடம் பணமே கிடையாது, தன் தாயின் நகையை விற்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே வந்தேன் என்று கூறியிருந்தார். ஆனால் வெளியில் இவரது நண்பர்களோ இவருக்கு 2மாடி கொண்ட சொந்த வீடு இருக்கிறது, சொந்தப் பணத்தில் இரண்டு படங்களை கூட தயாரித்திருக்கிறார் என்றெல்லாம் இவர் மீது விமர்சனங்களை வைத்தார்கள் மேலும் இவரது தாயார் நடத்தி வரும் கருடா சாரீஸ் என்ற துணிக்கடை நிறுவனத்தின் மூலமாக எம்எல்எம் என்கிற ஆள் சேர்த்து விடும் வழியில் 80 லட்சம் பணத்தை தனலெட்சுமியும் அவரது தாயாரும்திருடியதாகவும் தனலட்சுமின் நண்பர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.


மேலும் தன்னுடைய அப்பா தன்னுடன் இல்லை என்றும் தனலட்சுமி ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். ஆனால் அவரது அப்பா உடனேயே டிக் டாக் செய்து அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் தனலட்சுமி. இது போல் தொடர்ந்து தனலட்சுமி பொய் சொல்லி வருவதாக தனலட்சுமி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்ட தனலெட்சுமி ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். இருந்தபோதிலும் அவரது கோபமும் அவரது வார்த்தைகளும் பலரை காயப்படுத்தின. அதற்கு அவர் மன்னிப்பு கூட கேட்டது கிடையாது. இந்த நிலையில் இந்த வாரம் 10 பேரில் ஏழு பேர் நாமினேஷனில் இருக்க தனலட்சுமியும் மாட்டிக் கொண்டார். பெரும்பாலானவர்கள் தனலட்சுமி தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதேபோல தனலட்சுமி தான் தற்போது வெளியேற இருக்கிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அதிகாரப்பூர்வதற்ற முறையில் எடுக்கப்படும் வாக்கடுப்புகளில் தனலட்சுமி அதிக ஓட்டுக்களை பெற்றிருக்கிறார்.


ஆனால் தனலட்சுமி பொதுமக்களில் இருந்து வந்தவர் என்பதாலும், மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது மக்களிடம் செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தினாலும் தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மேலும் மைனா ரட்சிதா போன்றவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வெளியில் இருப்பதால் இருப்பதாலும், அவர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் என்பதாலும் அவர்களை தக்க வைக்க தான் பிக்பாஸ் திட்டமிடுகிறது என்று பிக்பாஸ் மீது இணைய நெட்டிசன்களுப், பிக்பாஸ் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல் தெரிந்துவிடும். அப்படியே தனலட்சுமி வெளியேறும் பட்சத்தில் Freez டாஸ்க்கில் தனது தாயை இந்த பிக்பாஸிற்குள் அழைத்து வந்து பெருமைப்படுத்த வேண்டும் என்ற தனலட்சுமியின் ஆசை நிறைவேறாமலேயே வெளியேற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்