இந்த வாரம் ஷிவின் வெளியேறுகிறாரா?? மீண்டும் ஒரு அதிரடி வெளியேற்றத்துக்கு தயாரான பிக்பாஸ்?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி இன்றுடன் 89 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இன்னும் 17 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் 8 போட்டியாளர்கள் பிக்பாஸில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது யார் வெளியேறுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. அமுதவாணன் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக அவருக்கு பைனலுக்கு செல்லும் நேரடி டிக்கெட் கிடைத்திருப்பதால் அவர் வெளியேற வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது. இதனால் அவருக்கு அடுத்த இடத்தில் குறைந்த ஓட்டுகள் வாங்கிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி மக்களால் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் விளையாட தொடங்கினர். சுமார் 89 நாட்களைக் கடந்த பிறகு தற்போது 8 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். மீதம் 17 நாட்கள் மட்டுமே இருக்கிறது.

இந்த வாரம் ஷிவின் வெளியேறுகிறாரா?? மீண்டும் ஒரு அதிரடி வெளியேற்றத்துக்கு தயாரான பிக்பாஸ்? 1
இதனால் இந்த வாரம் ஒருவர் வெளியேறி விட்டால் மீதமும் இருக்கும் ஏழு பேரில் அடுத்த வாரம் இரண்டு பேரை வெளியேற்றிவிட்டு அதற்கு அடுத்த வாரம் ஐந்து பேரை பைனலுக்கு கொண்டு செல்ல பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .இந்த வாரம் நடந்த நாமினேஷன் பிராசஸ் சற்று வித்தியாசமானது. பிக்பாஸ் கன்பசன் அறைக்கு அழைத்து இத்தனை நாள் இந்த வீட்டில் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். பேசிக் கொண்டிருக்கும் போது 10 செகண்ட் இடைவெளி விட்டால் அவர்கள் அவுட் ஆகி விடுவார்கள் என்றும் அறிவித்தார். அதன்படி தொடர்ந்து ஒன்றரை மணி நேரமாக பேசி நாமினேஷன் ப்ரீயை பெற்றிருந்தார் அசீம். அவர் தவிர மீதி அனைவரும் நாமினேஷன் இருந்தார்கள். இந்த நிலையில் அமுதவாணன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்று இருக்கிறார்.

இதனால் அமுதவாணனுக்கு அடுத்த இடத்தில் ஷிவின் மற்றும் ரட்சிதா இருவரும் குறைந்த வாக்குகள் பற்றிய கடைசி இடத்தை பிடித்திருக்கின்றனர். நமது இணையதளத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் அவர்களே குறைந்த வாக்கு பெற்று இருக்கின்றனர். இதனால் அவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கவில்லை என்றால் மைனா அல்லது ஏடிகே வெளியேற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஏடிகே விற்கு உடல் நலக் குறைவு காரணமாக அவரால் சரியாக போட்டிகளில் பங்கெடுத்து முடியவில்லை. இந்த ஒரு காரணத்தை வைத்து ஏடிகே வெளியேறலாம் அல்லது வெளியில் மைனாவிற்கு இருக்கும் ஆதரவு குறைவு காரணமாக இந்த வாரம் மைனா வெளியேறலாம் என்ற கருத்தும் நிலவுகிறது . நாளை யார் வெளியேறுவார்கள் என்று உறுதியான தகவல்கள் கிடைத்துவிடும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்