பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள கடைசி எலிமினேஷன்.! இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 96 நாட்கள நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் கடைசி வெளியேற்றம் நடக்கப்பட உள்ளது. அதன்படி இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸ் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு சற்று வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது. 21 போட்டியாளர்களின் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் கடைசியாக ஏழு நபர்கள் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர். மேலும் disney+ hotstar ஓடிடி தளத்தில் லைவ்வாக பார்க்கும் விதமாக நேரலையாக 24 மணி நேரமும் ஒளிபரப்பபட்டு வருகிறது. பிக்பாஸ்ஸில் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அமுதவாணன் நேரடியாக பைனலுக்கு சென்று இருக்கிறார். இதனால் மீதம் இருக்கும் ஆறு பேரும் நாமினேஷனில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6-ன் கடைசி எலிமினேஷன் நடக்க இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் நடக்க உள்ள கடைசி எலிமினேஷன்.! இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா? 1
இந்த வார நாமினேஷனில் அசீம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ஷிவின் என மொத்தம் ஆறு பேர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். பிக்பாஸ் எப்பொழுதும் 100 நாட்களுடன் முடிவடையாது. 106-வது நாள் தான் நிறைவடையும். தற்போது 96 நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் மீதம்10 நாட்கள் இருக்கிறது. தற்போது எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் பலரை வீட்டிற்குள்ளே அனுப்பி இருக்கின்றனர். இதனால் வீடு கலவரம் ஆக மாறியிருக்கிறது. இன்று காலை முதல் வெளியான ப்ரோமோவில் அசீமுக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் சண்டை எழுந்துள்ளது. பின்னர் அசீமுக்கும் மகேஸ்வரிக்கும் சண்டை எழுந்திருந்தது. இந்த நிலையில் தற்போது வாக்கு முடிவுகள் வந்துவிட்டது. நமது இணையதளத்தில் அதிகாரப்பூர்வ மற்றும் முறையில் எடுக்கப்படும் வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி மைனா மற்றும் கதிரவன் இருவரும் மிக சொற்ப வாக்குகள் வாங்கி கடைசி இரண்டு இடத்தை பிடித்திருக்கின்றனர். மைனா மற்றும் கதிரவன் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. பெரும்பாலும் மைனாவே வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஆனால் கதிரவன் மீது எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. அவர் விளையாட்டை ஒழுங்காக விளையாடாமல் ஆரம்பம் முதலே மிச்சர் சாப்பிட்டு வந்ததாகவும், சேஃப் கேம் விளையாடி வருவதாகவும் பலர் கருத்து கூறி வந்த நிலையில் அவர் இன்னமும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசி வாரத்தில் வைக்கப்படும் பொட்டி டாஸ்கில் ஒருவர் வெளியேறிவிட்டால் மீதம் இருக்கும் ஐந்து பேரை வைத்து டாப் பைனலிஸ்ட் உடன் பிக்பாஸை முடிக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்