குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று முன்னணி கதாநாயகனாகவும் உலகநாயகனாகவும் ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இவருக்கு உலக சினிமாவிலேயே பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல வெற்றிப்படங்களை பல மொழிகளில் கொடுத்து தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்து கலக்கி உள்ளார். இப்படத்தினை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தக் லைப் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்து உள்ளனர்.
தற்போது தக் லைஃப் படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் இதனை கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை வீடியோ பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Embed Video Credits : Turmeric media