Categories: சினிமா

மரண மாஸாக வெளியானது துணிவு படத்தின் 1st சிங்கிள் “சில்லா சில்லா”. ! தல தரிசனம்.!

வெளியிட்டது

துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சில்லா சில்லா” என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடல் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இவரது படங்கள் வெளியாகும் அன்று தமிழகமே அல்லோளப்பட்டு விடும். அளவிற்கு இவரது ரசிகர்கள் மாஸ் செய்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது தல அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் பொங்கலுக்கு தளபதி விஜயின் வாரிசுடன் மோத இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா செல்லா என்கிற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரண மாஸாக வெளியானது துணிவு படத்தின் 1st சிங்கிள் "சில்லா சில்லா". ! தல தரிசனம்.! 1

அஜித்தும் எச்.வினோத்தும் இணைந்து தற்போது மூன்றாவது முறையாக கைகோர்த்து இருக்கின்றனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது. இந்தப் படத்தில் தல அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது, அது முதலே #ThunivufirstSingle மற்றும் #chillachilla என்ற ஹேஸ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. தொடர்ந்து அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் முதல் சிங்கிள் வெளியாக போவதை அஜித்தின் புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சில்லா சில்லா பாடல் வெளியாகி இருக்கிறது. சில்லா சில்லா என்ற உடனேயே இந்த பாடல் சில்லென்று இருக்கும் என்று நிறைய பேர் எதிர்பார்த்தார்கள். ஆனால் பஞ்ச் டயலாக், தெறிக்க விடும் மாஸ் வசனங்களுடன் இந்தப் பாட்டு வேற லெவலில் வந்திருக்கிறது. வேதாளம் படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா போன்ற பாடல் போலவே, இந்த பாட்டு மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த பாடலை கேட்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!

YouTube Video Code Embed Credits: Zee Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்