Categories: சினிமா

சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள தல.! மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு.!

வெளியிட்டது

தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை தற்போது படக்குழுவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் துணிவு. இந்த படத்தில் எச் வினோத்துடன் இணைந்து மூன்றாவது முறையாக கை கோர்த்து நடித்திருந்தார் அஜித்குமார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். ஏற்கனவே இந்த கூட்டணி இரண்டு படங்களில் நடித்து வெற்றி பெற்றதால் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து இருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள தல.! மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு.! 1
படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சாதனை படைத்திருந்தது. ட்ரெய்லர் வெளியாகி சில நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய வரலாற்று சாதனை படைத்திருந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் வசூலை நெருங்கி இருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். துணிவு படத்துடன் நேரடியாக மோதியிருந்த வாரிசு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரங்களை அந்த படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் துணிவு படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்து வருகிறது. பொங்கலுக்கு விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியாகி இருந்ததால் பொங்கல் வின்னர் யார்? என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வருகிறது.

ஆனால் வாரிசு படத்தின் வசூல் குறித்த அப்டேட்டுகளை படக்குழு ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வரும் நிலையில், துணிவு பணத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து எந்த விதமான அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது துணிவு படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த மேக்கிங் வீடியோ ஒன்றை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவை பல லட்சம் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Zee Studios.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்