Categories: சினிமா

ஜனவரி 12 இல்ல.! முன்கூட்டியே வெளியாகிறது துணிவு.! அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்.!

வெளியிட்டது

துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. அனைவரும் ஜனவரி 12 படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முன்கூட்டியே வெளியாகிறது துணிவு படம். தமிழில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் துணிவு. இந்த படத்தை எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். போனிக் கபூர் ஹெச் வினோத் அஜித்குமார் இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் துணிவு. இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கலை ஒட்டி விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் திரையில் வர இருப்பதால் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார்கள். மேலும் இரண்டு படங்களும் ஒரே நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே துணிவு படம் வெளியாக இருக்கிறது. அதை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஜனவரி 12 இல்ல.! முன்கூட்டியே வெளியாகிறது துணிவு.! அதிகாரபூர்வமாக அறிவித்த போனி கபூர்.! 1

துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பட குழு அறிவித்து இருந்தது. ஆனால் தேதியை மட்டும் அறிவிக்காமல் இரண்டு படக்குழுவினரும் காலம் தாழ்த்தி வந்தனர். ஒரே சமயத்தில் இரண்டு படங்களும் வெளியானால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று கருதியதால் இந்த காலதாமதம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்றைக்கு வாரிசு படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரின் முடிவில் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியின் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த நிலையில் அந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது துணிவு படத்தின் தேதியை அறிவித்திருக்கிறார் போனி கபூர். அதன்படி ஜனவரி 11-ம் தேதியே துணிவு படம் வெளியாக இருக்கிறது.

துணிவு படத்தின் டிரைலர் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த ட்ரெய்லர் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்த ட்ரெய்லருக்கு 14 லட்சம் லைக்சும் குவிந்திருக்கிறது. இந்த படத்தின் டிரைலரை பார்த்த பின்பு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து துணிவு உருவாகி இருப்பது உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் என்றைக்கு ரிலீஸ் செய்யப்படும் என்ற தேதியை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். துணிவு ரிலீஸ் தேதியை வைத்துதான் வாரிசு தேதியே அறிவிக்க காத்திருப்பதாக விஜய் அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் மோதிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஜனவரி 11-ம் தேதி புதன்கிழமை துணிவ வெளியாகும் என்று போனி கபூர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால் வாரிசு தேதியும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்