உருவாகிவரும் துப்பாக்கி 2! ஆனா இந்த படத்துல விஜய் ஹீரோ இல்லையாமே ?

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

உருவாகிவரும் துப்பாக்கி 2! ஆனா இந்த படத்துல விஜய் ஹீரோ இல்லையாமே ? 1

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைபடத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தளபதி விஜயின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதிலும் துப்பாக்கி , கத்தி ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களின் favourite.

தற்போது விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி 2 படத்தின் கதையை தயார் செய்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக கமல் நடிக்கவுள்ளதாகவும் , கதையை கமல்ஹாசனுக்கு ஏற்றவாறு ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்