சினிமாவில் இப்பொது நடிகர்கள் தங்களுடைய படங்களின் collection-களை வைத்து போட்டி போடுவதை விட, தற்போது சம்பள விவகாரத்தில் நிறையவே போட்டி போடுகிறார்கள். ஒரு படம் வெற்றி அடைந்தால், அந்த collection’க்கு ஏற்ப சம்பளமும் கிடுகிடுவென உயர்த்தி விடுகிறார்கள். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் மிக பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு வாசிகளே. குறிப்பாக அடுத்தடுத்து 500, 1000 கோடி collection படங்களுடன் தெலுகு சினிமாவின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது.

இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், அல்லு அர்ஜுனின் புஷ்பா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வசூலை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்து வெளியான முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவியின் ஆச்சார்யா, பிரபாஸின் ராதே ஷியாம், மகேஷ் பாபுவின் “சர்க்காரு வாரி பாட்ட” படங்கள் மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தயாரிப்பாளர்கள் சார்பிலும், விநியோகிஸ்தர்கள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையும் நிறைய டோலிவுட் படங்கள் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக துவங்கியுள்ளன. ஆனால் நீண்ட காலமாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் படத்தின் பட்ஜெட்டில் பாதியை நடிகர்கள் சம்பளமாக கேட்பது தான். ஆம், இப்பொது டோலிவுட்டில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் சம்பளம் 80 கோடியை நெருங்கியுள்ளது. பாகுபலியின் வெற்றிக்கு பிறகு இரண்டு மிக பெரிய தோல்வி படங்கள் கொடுத்தாலும் பிரபாஸ் 100 கோடி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்கு பிறகு இப்பொது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் 50 முதல் 60 கோடி கேட்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்குள் ஆளாகி உள்ளனர்.
அதே போல நடிகைகளும் ஓரிரு படங்கள் வெற்றியடைந்தாலே 10 கோடி சம்பளம் கேட்கும் அளவிற்கு சென்று விட்டார்கள். “நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டும் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு , தங்களுக்கு மட்டும் தினக்கூலியையே ஒழுங்கா கொடுப்பதில்லை என கூறி, அவர்கள் சம்பளத்தையும் 45 சதவீதம் உயர்த்த வேண்டும் என சென்ற வாரம் திடீரென திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனைகள் முற்றி கொண்டே போக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் The Active Telugu Producers Guild , “வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எந்தவொரு படப்பிடிப்பும் நடக்காது” என அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அநியாயத்திற்கு சென்று கொண்டிருக்கும் சம்பள விவகாரம் மற்றும் இதர பிரச்சனைகள் பற்றி பேசி விவாதித்த பின் ஷூட்டிங்கை தொடங்கலாம் எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.