பீஸ்ட் படத்தை கலாய்த்து தள்ளிய மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜும்கானா பாடல்கள் வெளியான போது மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து இருந்தது. அதே போல் ட்ரைலர் வெளியான சில ஒரு நாளில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து இருந்தது. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனால் படம் வெளியான பின்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 100 நாட்கள் கூட சரியாக ஓடவில்லை. அப்போதே படத்தின் இயக்குனர் நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விஜய்யின் தீவிர ரசிகர் ஃபேன் பாய் படம் என்று சொல்லிவிட்டு இப்படி ஒரு குப்பை கதையை எடுத்து வைத்துள்ளீர்களே என்று நெல்சனை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர், இதனால் இவருடன் இணைந்து விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் படத்தில் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்ததால் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி அடைந்தது. படம் வெளியான மறுநாளே லாஜிக் ஓட்டைகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் கலாய்த்து தள்ளி வந்தனர் நெட்டிசன்கள். க்ளைமாக்ஸில் விமானம் ஓட்டும் சீன் பலராலும் கலாய்த்து தள்ளப்பட்டது. இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து வந்த நிலையில் விக்ரம் படம் பெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சனை மீம் போட்டு கலாய்த்து தள்ளி வந்தனர். பீஸ்ட் படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள நடிகரான டாம் ஷைன் சாக்கோ.
இவர் மலையாள சேனலுக்கு பேட்டி அளித்த போது விஜயையும், நெல்சனையும் பீஸ்ட் படத்தையும் கலாய்த்து தள்ளினார். அவர் கூறும் போது, ஏதாவது ஒரு வெயிட்டான பொருளை தூக்கினால் முகத்தில் எக்ஸ்பிரஷன் தெரியும், ஆனால் ஒரு சீனில் விஜய் என்னை கட்டித் தூக்கி வருவார் அப்போது அவர் முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷன் கூட இருக்காது என்று சொல்லிவிட்டு கேலியாக சிரித்தார் மேலும் படத்தை நான் பார்க்கவேயில்லை, மீம்ஸ் மட்டுமே பார்த்தேன் என்றும் கூறினார். இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. டாம் ஷைன் சாக்கோவை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். இத்தனை நாட்களுக்கு பிறகு அவர் நான் பீஸ்ட் படம் குறித்து மீடியாவில் பேசியது தவறுதான் என்னை மன்னித்து விடு நண்பா என்று கூறியுள்ளார்.