
பல தேசிய விருதுகளை வென்று ஆடுகளம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.அதற்குப் பிறகு அஜீத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடத்தவுள்ளார் தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருந்து வருகிறார். கோவாவில் நடைபெறும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று கலந்துகொண்ட நடிகை டாப்ஸி ஓர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் மற்றும் பார்வையாளர்களிடமும் அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது, இந்தி பேசும் ஒருவர், டாப்சியிடம் இந்தி மொழியில் பேசுமாறு வற்புறுத்தினார்.
உடனே, அங்கிருந்த மற்ற அனைவரையும் பார்த்து எல்லோருக்கும் இந்தி தெரியுமா?” என டாப்ஸி கேட்க, அதற்கு பெரும்பாலானோர் இல்லை என பதிலளித்திருந்தனர். இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து, ‘நீங்கள் இந்திப்படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை தானே, அதனால் நீங்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என வற்புறுத்த, சட்டென்று பதிலளித்த டாப்ஸி. “நான் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடிக்கின்ற நடிகை, அதனால் நான் தமிழிலோ, தெலுங்கிலோ பேசட்டுமா?” என்று கேட்டு அதிர வைத்தார்.இதனை கேட்டுக்கொண்டிருந்த அரங்கத்தில் இருந்தவர்கள் டாப்ஸியின் பதிலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட டாப்ஸி டெல்லியில் பிறந்தவர். குழந்தைப்பருவத்தில் இருந்தே வடஇந்தியாவில் இந்தி பேசி வருகிறார் என்றாலும், கலைக்கு மொழி என்றுமே தடையில்லை என்ற உணர்வோடு, இந்தியில் பேச மறுத்த டாப்ஸியின் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தமிழை மறக்காத டாப்ஸியை புகழ்ந்து வருகின்றனர்.