சர்ச்சைக்குள் சிக்கிய விஜய் டிவி சீரியலில் டி ராஜேந்தர்! புகைப்படம் உள்ளே

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் இந்த மாதம் 16 தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஒரு புதிய சீரியல் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. ஈரமான ரோஜாவே புகழ் ‘பவித்ரா ஜனனி’ மற்றும் ‘வினோத் பாபு’ முன்னணி நடிகை, நடிகராக நடித்து வருகிறார்கள். இதில் சமந்தா கிரண், தேவ், வாசு விக்ரம், அஷ்வின் கார்த்திக் என பல சின்னத்திரை

சர்ச்சைக்குள் சிக்கிய விஜய் டிவி சீரியலில் டி ராஜேந்தர்! புகைப்படம் உள்ளே 1

நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வித்யாசமான கதையை உடைய இந்த சீரியலின் முதல் ப்ரோமோவிலேயே மக்களிடம் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சமூக ஆர்வலர்கள் பலர் இந்த சீரியலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் சீரியல் ஒளிபரப்பாகி தான் வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர், இயக்குனர், கதாசிரியர், பாடகர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் இந்த சீரியலில் நடிக்கப் போவதாகவும் அவருடன் சீரியல் நட்சத்திரங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இவர் தற்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்