Categories: சமூகம்

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த! தமிழக போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தல்!!

வெளியிட்டது
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த! தமிழக போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தல்!! 1

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளுக்கு சொந்தமான 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வாகனம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டறிய தேவையான ஜி.பி.ஆா்.எஸ் கருவியையும் பொருத்த வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் பொருத்துவது குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்கள்.

இதையடுத்து, அனைத்து தனியாா் பள்ளி வாகனங்களிலும் கேமிராக்கள் மற்றும் ஜி.பி.ஆா்.எஸ் கருவிகள் பொருத்த வேண்டும் என, தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அனைத்து தனியாா் பள்ளி நிா்வாகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில், இதே உத்தரவை கடைப்பிடிக்குமாறு பள்ளிகளுக்கு தமிழக போக்குவரத்துத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவால் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்