Categories: சினிமா

போலீஸாக மிரட்டும் நடிகை த்ரிஷா..! போர் தொழில் படத்தையே மிஞ்சிய பிருந்தா படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை த்ரிஷா. இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் லேசா லேசா. இப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. கூட்டத்தில் ஒருத்தராக இருந்த த்ரிஷா தனது கடின உழைப்பினால் பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து இன்று உச்ச நடிகையாக உருவெடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸாக மிரட்டும் நடிகை த்ரிஷா..! போர் தொழில் படத்தையே மிஞ்சிய பிருந்தா படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியது..! 1

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் த்ரிஷா கால்தடம் பதித்து கலக்கி வருகிறார். கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்துள்ள இவர் அண்மையில் வெளியான லியோ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது நடிகர் அஜித் உடனும் த்ரிஷா விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பிருந்தா படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. சோனி ஓடிடியில் இப்படம் நேரிடையாக வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் கூட்டியுள்ளது.

Embed Video Credits : SONY LIV

வெளியிட்டது

புதிய செய்திகள்