திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகளை அப்படியே பிரதிபலிக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திரிஷாவை போல அப்படியே உருவ தோற்றம் கொண்ட ஒருவர் மைசூரில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் குடும்பப் பாங்கான படங்கள் தொடங்கி, பல வெற்றி படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை திரிஷா. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது அவரைப் போலவே இருக்கும் ஒருவர் திரிஷா போலவே குந்தவையாக வேடமிட்டு புகைப்படங்களை instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பார்ப்பதற்கு அச்சு அசலாக வித்யாசமே தெரியாமல் திரிஷா போலவே இருக்கிறார்.
தற்போது பிரமோஷனுக்காக த்ரிஷா கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என தொடர் சுற்றுப்பயணங்களில் இருக்கிறார். படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அச்சு அசல் திரிஷா போலவே இருக்கும் தீபிகா விஜய், திரிஷா போலவே உடைய அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் குந்தவைப் போலவே உடை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே திரிஷா போல் இருப்பதாக கூறி வருகின்றனர் நீங்களும் அவரின் புகைப்படங்களை பாருங்கள்.