“சந்திரமுகியாக ஆண்ட்ரியா இல்லை திரிஷா”!!”ரசிகர்களை மீண்டும் பேய் வேடத்தில் மிரட்டவிருக்கும் திரிஷா”!!

வெளியிட்டது

1999ஆம் நடிகை சிம்ரனின் தோழியாக முதல் முறை சினிமாவில் தோன்றினார் நடிகை திரிஷா. சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி பின் நாயகியாக வளர்ந்து 40 வயதை நெருங்கியும் இன்றளவும் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார் திரிஷா. 23 ஆண்டு சினிமா வாழக்கையில் இவர் அடைந்திராத உச்சமும் இல்லை, கடந்திராத தோல்விகளும் இல்லை. தென்னிந்தியா சினிமாவின் ராணி என அழைக்கப்படும் திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் முக்கிய சினிமா திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

"சந்திரமுகியாக ஆண்ட்ரியா இல்லை திரிஷா"!!"ரசிகர்களை மீண்டும் பேய் வேடத்தில் மிரட்டவிருக்கும் திரிஷா"!! 1

2002ஆம் சூரியா, நந்தா, லைலா நடிப்பில் அமீர் இயக்குனராக அறிமுகமான “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் திரையில் நாயகியாக மாறினார் திரிஷா. தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகை என்பதால் எளிதில் மற்ற மொழி நடிகைகளை பின்னுக்கு தள்ளி அழகு, நடிப்பு என திறமையுடன் விரைவில் முன்னணி நடிகையாக மாறினார். நடிகர் விஜய்யின் “கில்லி” படம் இவர் நட்சத்திர நாயகியாக்க, பின் தொடர்ந்து அவருடனே 5 படங்கள் நடித்தார். ஒரே காலகட்டத்தில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் அழகான பார்க்கப்பட்டு இருவருடனும் மாறிமாறி படங்கள் நடித்தார். இதுவரை தமிழிலுள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ். சிம்பு. விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளார். அன்று துவங்கி இன்று இருக்கும் நாயகர்கள் வரை அனைவருடனும் இணைத்து நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ள இவர், இப்பொது “பிருந்தா” என்னும் வெப் சீரிஸ்ஸில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இதனை அடுத்து பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள, “பொன்னியின் செல்வன்” படத்திலும் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்பொது 2005ஆம் ஆண்டு ரஜினின் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” அப்படத்தின் அடுத்த பாகம் துவங்கப்படவுள்ளது. ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கவுள்ள இந்த படத்தை மீண்டும் பி.வாசு இயக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு நாயகி வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா நடிக்க முன்னணியில் இருந்தாலும் அவர் ஏற்கனவே பிசாசு 2, அவள் போன்ற பேய் படங்களில் நடித்துள்ளதால் கொஞ்சம் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் அடுத்த ஆளாக படக்குழு நடிகை த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

முதல் படத்தில் சிம்ரன் நடிக்க இருந்த கதாபாத்திரம் கைநழுவி ஜோதிகாவிடம் மாட்ட, நடிப்பில் அனைவரையும் மிரட்டி எடுத்தவர் ஜோதிகா. இப்பொது அந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமானால் அவர் எப்படி நடித்து மிரட்டுவார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்