நடிகை திரிஷாவின் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரேங்க் கார்டு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் 1999 ஆம் ஆண்டு முதன்முறையாக நடிக்கத் தொடங்கினார். ஜோடி என்கிற படத்தின் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்திற்கு பின்பு பிரபலமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா.
இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்று சொன்னால் அது சாமி, கில்லி, திருப்பாச்சி, சம்திங் சம்திங், அபியும் நானும் போன்ற படங்களை சொல்லலாம். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்திருந்தார் திரிஷா.

திரிஷா நடிப்பில் கடைசியாக நடித்து கடந்த வாரம் வெளியாகி இருந்த படம் ராங்கி. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. மேலும் தற்போது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு, சதுரங்க வேட்டை பாகம் 2, ராம், தி ரோடு போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகள் பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை திரிஷா. சென்னையில் பிறந்து வளர்ந்த த்ரிஷா நடிக்கத் துங்குவதற்கு முன்பு மாடல் ஆக இருந்தார். இவர் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு தொடங்கி 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை என்ற பெருமையை த்ரிஷா பெற்றிருக்கிறார். இன்றுவரை அதே இளமையை அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.
நடிகை திரிஷாவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். திரிஷா ஏதாவது செய்தாலோ அல்லது திரிஷா பற்றிய ஏதாவது ஒரு தகவல் வெளியானாலோ அதை வைரலாக்கி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திரிஷாவின் ரேங்க் கார்டு ஒன்று வெளியாகியிருக்கிறது. அவர் மூன்றாம் படிக்கும் பொழுது அவர் பள்ளியில் கொடுத்த ரேங்க் கார்டு புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் அவர் படித்திருக்கிறார் .அந்த புகைப்படத்தில் மிக அழகாக க்யூட்டாக இருக்கிறார் திரிஷா. அந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.