Categories: சினிமா

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரிஷா நடிக்கும் ‘தி ரோடு’ படத்தின் ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகை திரிஷா நடித்து வரும் ‘தி ரோடு’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து பலரின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். அடுத்தபடியாக விஜயுடன் இணைந்து தளபதியின் 67வது படமான ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து ‘தி ரோடு’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அருண் வசீகரன் இயக்க சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், வேலராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1
கடந்த 2000 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மதுரைக்கு அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவிற்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கிறது. பின்னர் இந்த விபத்து செயற்கையாக நடத்தப்படுகிறது என்பதும், அதை ஏற்படுத்தியது யார் என்பதையும் அவர் கண்டுபிடிக்கிறார். அதை ட்ரைலராக தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பலரும் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.


நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்