Categories: சினிமா

தியேட்டரில் வாரிசு படத்தை பார்த்து விட்டு செம்ம Vibe செய்த த்ரிஷா.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

வாரிசு படத்தை பார்க்க வந்த நடிகை திரிஷா ரஞ்சிதமே பாடலுக்கு எழுந்து நின்று செம Vibe செய்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் த்ரிஷாவின் ரசிகர்கள் அவரையே பார்த்துக் கொண்டிருக்க என்னை பார்க்காதீர்கள் படத்தை பாருங்கள் என்பது போல வெட்கத்துடன் சைகை காட்டியிருக்கும் வீடியோவையும் திரிஷா ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கும் இன்று தான் பொங்கல். ஏனென்றால் விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவு படமும் இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அதிகாலை 4 மணி முதலே காட்சிகள் ஒளிபரப்பான நிலையில் பலரும் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை கிடைத்து வருகின்றது. இருந்த போதும் அடுத்த ஒரு வாரத்திற்கு இரண்டு படங்களும் ஹவுஸ்புல் ஆகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் வாரிசு படத்தை பார்த்து விட்டு செம்ம Vibe செய்த த்ரிஷா.! இதோ வீடியோ.! 1

வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். தமிழில் தவிர்க்க முடியாத இரண்டு சக்திகளாகவும் ஆனால் இரு வெவ்வேறு துருவங்களாகவும் இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். வங்கிக் கொள்ளையை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட துணிவு படத்தில் அஜித்தும், குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாரிசு படத்தில் விஜயும் நடித்திருந்தனர். இரண்டு படங்களின் டீசர் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்திருந்தது. இதனால் இந்த இரண்டு படங்களுக்குமான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இன்று காலை படம் வெளியானது முதலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக பட்டாசு வெடித்தும் பேனர்கள் வைத்தும் இரண்டு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட செய்திகளும் வெளியானது.


இந்த நிலையில் பலரும் இரண்டு படங்களின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது நடிகை திரிஷாவும் இரண்டு படங்களின் முதல் காட்சியை தனது நண்பர்களுடன் சென்று பார்த்திருக்கிறார். தியேட்டருக்கு சென்ற அவர் ரஞ்சிதமே பாடல் வந்தபோது எழுந்து நின்று பாடலுக்கு செம்ம Vibe செய்திருக்கிறார். அப்போது அவரையே பார்த்துக் கொண்டிருந்த பலரையும் என்னை பார்க்காதீர்கள் திரையைப் பாருங்கள் என்று வெட்கத்துடன் அழகாக கூறினார் திரிஷா. இந்த வீடியோவை பகிர்ந்த திரிஷாவின் ரசிகர்கள் செல்லத்துக்கு வெட்கத்தைப் பாரு என்று பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்